Friday, March 15, 2024
மேலும்
    Homeசமூக வலைதளம்அப்போதான்டா இறங்குமுகம்..இப்போ நான் ஏறுமுகம் - இலாபத்தில் நெட்ஃபிளிக்ஸ் !

    அப்போதான்டா இறங்குமுகம்..இப்போ நான் ஏறுமுகம் – இலாபத்தில் நெட்ஃபிளிக்ஸ் !

    நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்துக்கு மூன்றாம் காலாண்டில் 24 லட்சம் பார்வையாளர்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி நிறுவனம், திரைப்படங்களையும், தொடர்களையும் வெளியிட்டு வருகிறது. உலகெங்கும் கோடிக்கணக்கில் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தை மக்கள் உபயோகித்து வருகின்றனர். இந்த தள்த்திற்கென பலகோடி ரசிகர்கள் உள்ளனர். 

    இந்நிலையில், இந்நிலையில் நடப்பாண்டின் 3வது காலாண்டில், நெட்ஃபிளிக்ஸ் நிறுவனத்தின் பங்குகள் 14 சதவிகிதம் அதிகரித்துள்ளது. இதே காலகட்டத்தில் நெட்ஃபிளிக்ஸ் நிறுவனத்திற்கு 24 லட்சம் பார்வையாளர்கள் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    இதன்மூலம் 6 சதவிகிதம் வருவாய் அதிகரித்துள்ளது. அதாவது, 7.9 மில்லியன் டாலர் வருவாய் அதிகரித்துள்ளது. நெட்ஃபிளிக்ஸ் நிறுவனத்துக்கு கடந்த காலாண்டில் ஏற்பட்ட இழப்பு அதிகமாகும். அப்போது 10 லட்சம் பார்வையாளர்களை நெட்ஃபிளிக்ஸ் இழந்துள்ளது. அதற்கு முந்தைய காலாண்டில் 2 லட்சம் பார்வையாளர்களை நெட்ஃபிளிக்ஸ் இழந்தது குறிப்பிடத்தக்கது.

    அடுத்த இரு மாதங்களுக்கு எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ள சீரிஸ்களையும், திரைப்படங்களையும் தன்னகத்தில் வைத்துள்ளதால், பார்வையாளர்கள் நெட்ஃபிளிக்ஸில் மேலும் அதிகரிப்பார்கள் என்று கருதப்படுகிறது. 

    இதையும் படிங்க: அயோத்தியில் தீபோற்சவ விழாவை பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....