Friday, March 15, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாஅயோத்தியில் தீபஉற்சவ விழாவை பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார்

    அயோத்தியில் தீபஉற்சவ விழாவை பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார்

    அயோத்தியில் நாளை நடக்க உள்ள தீபோற்சவ விழாவை பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார்.

    தீபாவளியை முன்னிட்டு அயோத்தியில் பிரமாண்ட தீபோற்சவம் நடைபெற்று வருகிறது. சரயு நதிக்கரையில் லட்சக்கணக்கான தீபங்களை ஏற்றி வழிபாடு செய்யும் இந்த நிகழ்ச்சி 6-வது முறையாக இந்த ஆண்டும் நடைபெறுகிறது. 

    இந்த ஆண்டு நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் 15 லட்சத்துக்கும் அதிகமான தீபங்களை ஏற்றுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த பிரமாண்ட தீபோற்சவத்தை பிரதமர் மோடி நாளை (அக்டோபர் 23) மாலை தொடங்கி வைக்க உள்ளார். இதன்பிறகு அங்கு சரயு நதிக்கரையில் நடைபெறும் ஆரத்தி வழிபாட்டிலும் அவர் பங்கேற்க உள்ளார். 

    முதலில் அவர் அயோத்தியில் சாமி தரிசனம் செய்துவிட்டு, அதன்பின்னர், ராம பிரானுக்கு சிறப்பு பூஜைகளை செய்கிறார். மேலும் அங்கு பல மாநில கலைஞர்களின் நடனம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன. 

    இந்த அயோத்தி தீபோற்சவ நிகழ்ச்சியில் மோடி முதல் முறையாக பங்கேற்பது குறிப்பிடத்தக்கது.

    இதையும் படிங்க: பூதாகரமாகும் சிறுத்தை விவகாரம்! ஓபிஸ் மகன் ரவீந்திரநாத் எம்பிக்கு நோட்டீஸ் அனுப்பிய வனத்துறை

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....