Monday, May 15, 2023
மேலும்
  Homeஅறிவியல்நாம் காணாத பிரபஞ்சத்தின் புகைப்படம் வெளியீடு

  நாம் காணாத பிரபஞ்சத்தின் புகைப்படம் வெளியீடு

  “நாசா” கரீனா, தெற்கு ரிங், ஸ்டிபன் குயின்டெட் எனப் பெயரிடப்பட்ட நெபுலாக்களின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. 

  அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, பிரபஞ்சம் தொடக்கத்தில் எவ்வாறு இருந்தது என்பதை தோற்றத்தின் வாயிலாக கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இது குறித்த தீவிரமான ஆய்வானது நாசாவால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

  இந்த ஆய்வின் ஒரு பகுதியாக, கடந்த ஆண்டு ரூ.79,000 கோடி செலவில் ஜேம்ஸ் வெப் என்ற சக்திவாய்ந்த தொலைநோக்கியை நாசா நிறுவியது. இந்த ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் Ariane flight VA256 என்ற ராக்கெட்டின் மூலம் விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது. 

  ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி, பல மில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் இருக்கும் நட்சத்திரம், கிரகங்கள், அண்டங்களை ஆராய உதவும். மேலும், உலகம் தோன்றியது எப்படி என்பதையும் இத்தொலைநோக்கியின் மூலம் அறிய வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

  ஒளியாண்டு என்பது ஒளி ஓர் ஆண்டில் செல்லும் தொலைவைக் குறிக்கும். அதாவது ஒரு வினாடிக்கு ஒளி பயணிக்கும் தொலைவை ஒளி வினாடி என்று வைத்துக்கொள்வோம். அதே ஒளி ஓர் ஆண்டு பயணிக்கும் தொலைவு ஒளி ஆண்டு எனப்படும். 

  அகச்சிவப்பு கதிர்கள் மூலம் இயங்கும் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி மிகத் துல்லியமாக ஒளிகளை பதிவுசெய்யக்கூடியவை. 

  அந்த வகையில், நாசா நேற்று ஒரு புகைப்படத்தை வெளியிட்டது. அப்புகைப்படத்தில் 4.6 பில்லியன் ஒளி ஆண்டுகள் பயணித்துவந்த நட்சத்திர தொகுப்புகள் இடம்பெற்றிருந்தது. 

  மேலும், நாசா WA SP-96b, கரீனா நெபுலா, தெற்கு ரிங், ஸ்டிபன் குயின்டெட் எனப் பெயரிடப்பட்ட நெபுலாக்களின் புகைப்படங்களை வெளியிட்டது. 

  நெபுலா என்பது தூசுகள் மற்றும் வாயுகள் அடங்கிய கூட்டு அமைப்பு ஆகும். 

  WA SP-96b 

  இது ஒரு தரவு புகைப்படம். இந்தத் தரவில் அலைவரிசைகளை நாம் காணலாம். நமது சூரிய குடும்பத்துக்கு வெளியே உள்ள இந்த வெப்பமான பெரிய கிரகத்தை ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி விரிவாகக் கவனித்தது. மேலும், முன்பு எப்போதும் இல்லா வகையில் இம்முறை இந்த கிரகத்தில் நீர் இருப்புக்கான ஆதாரத்தை இது வெளிப்படுத்தியுள்ளது. 

  வளிமண்டலத்தில் உள்ள தண்ணீரை வெப் முதன்முதலில் கண்டறிவதன் மூலம், மற்ற கிரக வளிமண்டலங்கள் எதனால் ஆனது என்பதைப் புரிந்துகொள்ள முடியும். 

  தெற்கு ரிங் 

  நெபுலா வகையைச் சார்ந்த இது இறக்கும் நட்சத்திரத்தைச் சுற்றியுள்ள வாயு மேகம் ஆகும். இது தோராயமாக 2,000 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது. வெப் தொலைநோக்கியின் நவீன அகச்சிவப்பு கண்கள் இரண்டாவது இறக்கும் நட்சத்திரத்தை முதல் முறையாக முழு பார்வைக்கு கொண்டு வருகின்றது. 

  ஸ்டிபன் குயின்டெட் 

  பூமியில் இருந்து 290 ஒளி ஆண்டுகள் தொலைவில் இருக்கும் ஸ்டிபன் குயின்டெட் என்ற பிரபஞ்ச தொகுப்பாகும். இது பெகாஸஸ் என்ற பகுதியில் அமைந்துள்ளது. அருகருகே ஒன்றாக அமைந்து இருக்கும் 5 பிரபஞ்சங்கள் தொகுப்புதான் ஸ்டிபன் குயின்டெட். இவற்றுள் 4 பிரபஞ்சங்கள் ஒன்றுடன் ஒன்று மேலும் நட்சத்திர திரள்கள் உருவாவதை தூண்டுகின்றன. இதை வெப் தொலைநோக்கி பதிவு செய்துள்ளது. 

  கரீனா நெபுலா

  கரீனா நெபுலா என்பது வானத்தில் இருக்கும் மிகவும் வெளிச்சமான நெபுலாக்களில் ஒன்று. இந்த நெபுலா பூமியில் இருந்து 7600 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது. இது முழுக்க வாயுக்கள் மற்றும் துகள்களால் ஆனது. தூசுகளால் ஆன மலைப்பகுதியின் மீது வாயுக்கள் நிரம்பி உள்ளதாகவும், இங்கு பல நட்சத்திரங்கள் உருவாவதாகவும் நாசா அறிவித்துள்ளது. 

  மராட்டியத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைப்பு-ஏக்நாத் ஷிண்டே

  இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
  - Advertisment -

  Must Read

  காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

  சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....