Sunday, March 17, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குதிரை விமர்சனம்/சிறப்பு பார்வைஇந்தியாவே நடுங்கிய அந்த நாள்; மும்பை டைரீஸ் 26/11 - திரைப்பார்வை!

    இந்தியாவே நடுங்கிய அந்த நாள்; மும்பை டைரீஸ் 26/11 – திரைப்பார்வை!

    26-11-2008 

    மேலே குறிப்பிட்டுள்ள தேதி, ஏதோக் கடிதம் எழுதும் முன் போடப்படும் தேதி அல்ல; வரலாற்றில் துர் சம்பவங்களின் தேதிகளைத் தேடினால் கிடைக்கும் தேதிகளில் ஒன்று இது. இந்தியாவே பதறிய, மும்பையை நடுங்க வைத்த பயங்கரவாத செயல்கள் நடக்க தொடங்கிய நாள் தான் 26-11-2008.

    இன்றளவும் அதனின் தாக்கத்தை மும்பையின் சில பகுதிகளில், பல மனிதர்களிடத்தில் உணரலாம். 26/11 என்ற அன்றைய நாளில் நேர்ந்த துயரங்கள் எந்த வித உணர்வு வெளிப்படுத்தலிலும் விரைவில் அடங்காதவை. எதனாலும் அன்றைய தேதியில் அங்கிருந்த மனிதர்களுக்கு நேர்ந்த உணர்வுகளை தத்ரூபமாக விவரிக்க இயலாது. இருப்பினும் திரைத்துறை அந்த நாட்களின் நிகழ்வை முடிந்தளவு குறைந்தப் பட்சமாவது மக்களுக்கு கடத்தி விட வேண்டுமென்று முயற்சிகள் எடுத்தன, எடுத்த வண்ணம் உள்ளன.

    மும்பை டைரீஸ்

    இப்படியாக எடுத்த முயற்சியில், கடந்த வருடத்தில் வெளிவந்த ஒரு தொடர்தான் மும்பை டைரீஸ் 26/11. மும்பையில் பயங்கரவாத தாக்குதல்கள் நிகழ்ந்த அந்த நாட்களின் மீது, புனைவை செலுத்தி உருவான தொடர்தான் இது. குறைந்த அளவிலான மருத்துவர்கள், புதியதாய் பயிற்சிகளை மேற்கொள்வதற்காக வரும் மூன்று பயிற்சி மருத்துவர்கள், போதிய தொழில்நுட்பங்கள் இல்லாமையென இயங்கி வரும் ஒரு அரசு மருத்துவமனை, 26/11 அன்று நடந்த தாக்குதல்களில் காயமுற்ற பலருக்கு எப்படி சிகிச்சை அளித்திருக்கும் என்ற ஒற்றை கேள்வியை முதலில் தருகிறது இத்தொடர்.

    இந்த கேள்விக்கு பதிலாக, நிஜக் கதையில் செலுத்திய புனைவு மருத்துவமனைக்குள் மட்டுமே நகரும்படியாய் இருக்கும், என்ற பதிலை தொடரைப் பார்க்கும்முன் வெறுமனே போஸ்டர்களை வைத்து முடிவு செய்துக் கொள்ளும் மனங்கள் ஏராளம். இதை தட்டச்சு செய்பவனும் அப்படியான ஒரு மனநிலைக் கொண்டவன்தான் என்பதும் பதிவு செய்ய வேண்டிய ஒன்று. ஆனால் இப்படியாக நினைத்த மனங்களுக்கு, பெரும் திருப்பத்தை கொடுக்கும்படியாகத்தான் இத்தொடர் அமைந்தது. 

    மும்பை டைரீஸ்

    உண்மை சம்பவங்கள் துயரமாய் ஒருபுறம் நிகழ்ந்து கொண்டிருக்க, கதையில் வரும் மாந்தர்களின் தனி கதையும் துயரத்தின் அடிப்படையிலேயே இருக்கின்றன. அது நம்மை இன்னும் கதைப்பக்கம் இழுப்பதாகத்தான் இருக்கிறது. மனித மனம் எந்த அளவு பெரிய உணர்வுகளை நேசிக்கிறதோ, அதே அளவுதான் அன்பு சார்ந்த சிறிய உணர்வுகளையும் நேசிக்கிறது.

    அன்பின் அரவணைப்பிற்கான ஏக்கத்துடன் நிற்கும் மனிதர்களின் உள்ளுணர்வை என்றாவது ஆற அமர உள்நோக்கியபடி பார்த்திருக்கிறீர்களா? அது தரும் உணர்வின் வீரியம் கண்களில் நீரை தாரை தாரையாக வரவழைக்கும் வல்லமை கொண்டது. ஆனால் நாம் நம்முடன் இருக்கும் உறவுகளின் மீது மேலான கண்ணோட்டத்தை கூட செலுத்தாதவர்கள்தானே! கொஞ்சம் அவர்களை உற்று நோக்குங்கள் நீங்கள் நினைப்பது போல அவர்கள் ஆனந்தமாய் சிரிப்பதில்லை. வெறுமனே சிரிக்கிறார்கள். இப்படியான பார்வையையும் மும்பை டைரீஸ் 26/11 நிகழ்த்துகிறது. 

    எவ்வளவு பெரிய இன்னல்களிலும் சில மனித மனங்கள் பின்பற்றும் பாகுபாடை, கீழ்மை உணர்வை, இவர்கள் இப்படித்தான் எனும் எண்ணத்தின் அழுக்கை, கதை அதன் போக்கிலேயே கூறிய விதம் கண்டு வியந்துதான் ஆக வேண்டும். ஒவ்வொரு அத்தியாயங்களிலும் கதையின் போக்கின் மீது ஈடுபாடு அதிகரிக்கிறது. நீர்த்து போதல் என்ற ஒரு நிலையை கதை எந்த இடத்திலும் நிகழ்த்தவில்லை. சுவாரசியமாக செல்லக்கூடிய கதையில் எதை வேண்டுமானாலும் புகுத்தி கொள்ளலாம் என்றில்லாமல் எது தேவையோ அதை மட்டுமே புகுத்தி நம்மை உருக வைக்கிறது தொடர்.

    MumbaiDiaries

    பல கதாப்பாத்திரங்களைக் கொண்ட இக்கதையில் நம்மால் பலரையும் கவனிக்க முடிகிறது. நடிப்பும், அனைத்து டெக்னிஷியனின் பங்கும் சிறப்பாய் கூடி, தொடரை மேலும் ஸ்பெஷலாக்கியிருக்கிறது. கதையின் இறுதியில் நாம் உணர்வுப்பூர்வமாக இருப்போம் என்பது உறுதி. அமேசான் ப்ரைமில் மும்பை டைரீஸ் 26/11, தமிழ் டப்பிங்கிலும் காணக் கிடைக்கிறது. 

    ‘இப்படியும் ஒரு காமெடி படமா’ – நிவின் பாலியின் அசத்தல் படம் ஒரு பார்வை!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....