Monday, March 18, 2024
மேலும்
    Homeதொழில்நுட்பம்அசத்தலான சிறப்பம்சங்களுடன் சந்தைக்கு வருகிறது மோட்டோவின் புதிய மாடல் செல்போன்!!

    அசத்தலான சிறப்பம்சங்களுடன் சந்தைக்கு வருகிறது மோட்டோவின் புதிய மாடல் செல்போன்!!

    லெனோவோவிற்குச் சொந்தமான மோட்டோரோலா நிறுவனமானது ‘மோட்டோரோலா எட்ஜ் 30’ என்கிற புதிய கைப்பேசியினை விற்பனைக்குக் கொண்டுவருகிறது. சர்வதேச சந்தைகளில் இன்று  (மே 11) வெளியாகும் இக்கைப்பேசியானது, நாளை (மே 12) இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது.

    5ஜி தொழில்நுட்பத்துடன் வெளிவரும் இந்த மோட்டோரோலா எட்ஜ் 30, ஸ்னாப்ட்ரகன் 778ஜி சிப்செட்டினைக் கொண்டுள்ளது. மேலும், 10bit சூப்பர் அமோல்ட் டிஸ்பிளேயினையும், 144ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு விகிதத்தினையும் கொண்டுள்ளது.

    பின் பக்கமாக  50mp+50mp+2mp அமைப்புக் கேமராவினையும், முன் பக்கமாக 32mp கேமரா அமைப்பினையும் கொண்டுள்ளது. 4020mah பேட்டரி கொண்டுள்ள இக்கைப்பேசியினை சார்ஜ் செய்ய 33w அதிவேக சார்ஜரும் கொடுக்கப்படவுள்ளது. 4கே வீடியோ தொழில்நுட்பமும் இதில் உள்ளது. 8ஜிபி ரேம்/128ஜிபி மெமரி மற்றும் 8ஜிபி ரேம்/256ஜிபி மெமரி ஆகிய இரண்டு வேரியண்ட்டுகளில் வெளிவருகிறது.

    6.7 இன்ச் அகலமான ஸ்க்ரீனுடன் சமீபத்திய பதிப்பான ஆண்ட்ராய்டு 12ஐ இயங்குதளமாகக் கொண்டுள்ளது. விளம்பரங்களில்லா இயங்குதளமே மோட்டோரோலா கைப்பேசிகளின் சிறப்பம்சமாக உள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக திங்க் ஷீல்ட் என்ற தொழில்நுட்பத்தினை சமீப காலமாக இந்த நிறுவனம் பயன்படுத்தி வருகிறது. அதே தொழில்நுட்பம் இந்த கைப்பேசியிலும் இடம்பெறும் என்று எதிர்பரக்கப் படுகிறது.

    டூயல் ஸ்பீக்கர் கொண்டுள்ள இக்கைப்பேசி, கொரில்லா கிளாஸ் பாதுகாப்புடன் வெளிவருகிறது. பல சிறப்பான தொழில்நுட்பங்களைக் கொண்ட மோட்டோரோலா எட்ஜ் 30 கைப்பேசியானது, இந்திய மதிப்பில் சுமார் 27000 ரூபாய்க்குள் வெளிவரும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

    இக்கைப்பேசியினை பிளிப்கார்ட் மற்றும் மோட்டோரோலாவின் அதிகார வலைதளத்தில் பெற்றுக்கொள்ளலாம். மிகச்சிறந்த விலைக்கு வெளியிடப்படுமாயின் இக்கைப்பேசியானது சமீபத்தில் வெளியான சாம்சங் கேலக்சி ஏ33, ஏ53 மற்றும் ஒன் பிளஸ் கைப்பேசிகளுக்கு சிறந்த போட்டியாய் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

    சும்மா..ஸ்டைலா, கெத்தா முதல் அணியாக ப்ளே ஆஃபிற்கு சென்ற குஜராத் டைட்டன்ஸ்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....