Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுசும்மா..ஸ்டைலா, கெத்தா முதல் அணியாக ப்ளே ஆஃபிற்கு சென்ற குஜராத் டைட்டன்ஸ்!

    சும்மா..ஸ்டைலா, கெத்தா முதல் அணியாக ப்ளே ஆஃபிற்கு சென்ற குஜராத் டைட்டன்ஸ்!

    நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில், குஜராத் டைட்டன்ஸ் அணி லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியினை வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் நீடிக்கிறது.

    57வது ஐபிஎல் போட்டி நேற்று புனேவில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கும், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கும் இடையில் நடைபெற்றது. டாஸ் வென்ற குஜராத் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது.

    தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய சாஹா 11 பந்துகளுக்கு ஐந்து ரன்கள் எடுத்து அவுட்டாகிய  நிலையில், மற்றொரு பக்கத்தில் ஆடிய சுப்மன் கில் 49 பந்துகளில் 63 ரன்கள் (ஏழு பவுண்டரிகள் உட்பட) எடுத்து அதிரடியாக விளையாடினர். மேத்யூ வேட் மற்றும் ஹர்திக் பாண்டியா வந்த வேகத்தில் பெவிலியன் திரும்ப இறுதிக் கட்டத்தில் டேவிட் மில்லர், ராகுல் திவாட்டியா அதிரடியாக ஆடி அணியின் ஸ்கோரினை உயர்த்த உதவினர்.

    மில்லர் 24 பந்துகளுக்கு 26 ரன்கள் எடுத்து ஹோல்டரின் பந்தில் அவுட் ஆனார். கடைசி வரை அவுட் ஆகாமல் களத்தில் இருந்த திவாட்டியா 16 பந்துகளில் 22 ரன்கள் எடுத்திருந்தார். 20 ஓவர்கள் முடிவில் குஜராத் டைட்டன்ஸ் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 144 ரன்கள் எடுத்தது. லக்னோ தரப்பில் ஆவேஷ் கான் 2 விக்கெட்டுகளையும், மோசின் கான், ஜேசன் ஹோல்டர் தலா ஒரு விக்கெட்டினையும் எடுத்தனர்.

    144 என்ற எளிதான இலக்குடன் களமிறங்கிய லக்னோ அணி தொடக்கத்திலேயே தடுமாற ஆரம்பித்தது. தொடக்க ஆட்டக்காரர்களான குயின்டன் டி காக், கே.எல்.ராகுல், பவுண்டரிகள் அடிக்கத் தவறியதுடன், தங்களது விக்கெட்டுகளையும் பவர் ப்ளேவில் இழந்தனர்.

    பவர் பிளே முடிவில் லக்னோ அணி 3 விக்கெட்டுகளை இழந்து 33 ரன்கள் எடுத்திருந்தது. பின்னர் வந்த லக்னோ ஆட்டக்காரர்களும் ஒற்றை இலக்க ரன்களில் அவுட் ஆக, 13.5 ஓவர்களில் தனது அனைத்து விக்கெட்டுகளை இழந்து 82 ரன்கள் எடுத்து படு தோல்வியைத் தழுவியது லக்னோ அணி.

    அந்த அணியில் அதிக பட்சமாக தீபக் ஹூடா 26 பந்துகளில் 27 ரன்கள் எடுத்திருந்தார். குஜராத் தரப்பில் ரஷீத் கான் 3.5 ஓவர்களில் 24 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை எடுத்தது அபாரம் காட்டினார். ஸ்ரீனிவாசன் சாய் கிஷோர், யாஷ் தயாள் இரண்டு விக்கெட்டுகளையும், முகமத் ஷமி ஒரு விக்கெட்டினையும் எடுத்தனர்.

    ஆட்டநாயகனாக சுப்மன் கில் அறிவிக்கப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் புள்ளிப் பட்டியலில் முதலிடத்தினைத் தக்க வைத்ததுடன், இந்த ஆண்டுக்கான பிளே ஆப் சுற்றுக்குள் நுழையும் முதல் அணி என்ற பெருமையினை குஜராத் டைட்டன்ஸ் அணி பெற்றது.  இன்று நடைபெறும் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, டெல்லி கேபிடல்ஸ் அணியினை எதிர்கொள்கிறது.

    பீட்ருட்ட கிள்ளிப் பார்த்து வாங்கனும்; கேரட்ட கீறிப் பார்த்து வாங்கனும்; மாம்பழத்த…..?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....