Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுமிரட்டல் வந்தது குறித்து மோடியிடம் தெரிவிப்பேன்; அவர் எனக்கு பாதுகாப்பு தருவார் - மதுரை ஆதீனம்...

    மிரட்டல் வந்தது குறித்து மோடியிடம் தெரிவிப்பேன்; அவர் எனக்கு பாதுகாப்பு தருவார் – மதுரை ஆதீனம் பேச்சு!

    தருமபுர ஆதீன மடத்தில் பட்டினப் பிரவேச நிகழ்வுக்கு விதித்த தடையை நீக்கி தமிழக அரசு அனுமதி அளித்து உள்ளது. முன்னராக பட்டினப் பிரவேச நிகழ்ச்சிக்கு தமிழக அரசு அனுமதி மறுத்த நிலையில், இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

    தருமபுர ஆதீனத்தில் பல நூற்றாண்டுகளாக நடைபெற்று வரும் பாரம்பரிய பட்டினப்பிரவேச நிகழ்ச்சிக்‍கு, மாவட்ட நிர்வாகம் தடை விதித்ததற்கு அரசியல் கட்சிப் பிரமுகர்கள் மற்றும் இந்து அமைப்பினர் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். பாரம்பரிய விழாக்‍களில் அரசு தலையிடக்‍கூடாது என்றும் கூறியிருந்தனர்.

    இதனைத் தொடர்ந்து பல்வேறு ஆதினங்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினர். அப்போது பட்டினப்பிரவேச நிகழ்ச்சி தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. இதனையடுத்து தருமபுரம் ஆதீனத்தின் பட்டினப் பிரவேச நிகழ்வுக்கு தமிழக முதலமைச்சர் அனுமதி அளித்து வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. இதனையடுத்து மாவட்ட நிர்வாகமும் அனுமதி அளித்தது.

    இதனையடுத்த மீண்டும் தமிழக அரசு அனுமதி அளித்ததால் மதுரை ஆதினம் தமிழக முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துள்ளார். மேலும், இதை வரவேற்று மதுரை ஆதீன மடம் சார்பில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

    இந்நிலையில் மதுரை ஆதீனம் ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரியார் நேற்று காலை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்..

    அதில், திருவையாறு நந்தி பெருமானின் 16 திருமுறைகளில் ‘ஆடும் பல்லக்கு’ என்ற பாடல் இடம்பெற்று உள்ளது. பட்டினப்பிரவேசம் என்பது நூற்றாண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து நடந்து வரும் மங்கள நிகழ்வு ஆகும். அதற்கு தமிழக அரசு நீண்ட போராட்டத்துக்கு பிறகு அனுமதி வழங்கி உள்ளது.

    இதற்காக தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    மேலும், இதற்கு ஆதரவு தெரிவித்த பா.ம.க. இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ், தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் ஆகியோருக்கும் இந்த நேரத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் எனக் கூறினார்.

    குறிப்பாக, திராவிடர் கழக தலைவர் வீரமணிக்கு வாழ்த்துக்கள். அவர் இவ்விஷயத்தை ஆரம்பிக்காமல் விட்டிருந்தால், பட்டினப்பிரவேசம் என்றால் என்ன என யாருக்கும் தெரிந்திருக்காது. இன்று உலகத்திற்கே தெரிந்து விட்டது.

    கஞ்சனுார் கோவில் இடங்களை ஆளுங்கட்சியினர் ஆக்கிரமித்ததுடன் மிரட்டுகின்றனர் என்று கூறி இருந்தேன். தவறு செய்யும் தி.மு.க. வினரை கட்சியில் இருந்து நீக்குவேன் என முதல்வர் கூறி இருந்தார்.

    அதன்படி, நடவடிக்கை எடுப்பார் என நம்புகிறேன். பள்ளத்துாரில் ஆதீன நிலத்தில் வீடு கட்டுவோம் என, தி.மு.க. வைச் சேர்ந்த ஊர் தலைவர் மிரட்டுகிறார். அவர் 6 லட்சம் ரூபாய் பாக்கி வைத்துள்ளார்.

    இப்படி இருந்தால் எப்படி நிர்வாகம் செய்ய முடியும். கஞ்சனுார் கோவில் பெண் நிர்வாக அதிகாரி, அன்னதானம் உண்டியலையே துாக்கிச் சென்று விட்டார். அறநிலையத்துறைக்கும், அரசுக்கும் கடிதம் எழுதினேன். இதுவரை நடவடிக்கை இல்லை. அன்னதானம் நடக்காமலேயே அன்னதானம் நடந்ததாக அவர் கணக்கு எழுதியுள்ளார்.

    நான், பா.ஜ.க, ஹிந்து அமைப்புகள் கட்டுப்பாட்டில் இருப்பதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து கவலைப்பட போவதில்லை. எல்லா சமய சம்பிரதாயங்களையும் முதல்வர் பாதுகாக்க வேண்டும். அவர் எல்லாருக்கும் முதல்வர். அறநிலையத்துறை கோவில்களில் கட்டணமில்லா தரிசனத்திற்கு அனுமதிக்க வேண்டும்.

    தி.மு.க.,வின் ஓராண்டு ஆட்சி குறித்து கருத்துக்கூற விரும்பவில்லை. எனக்கு மிரட்டல் வந்தது குறித்து பிரதமர் மோடியிடம் தெரிவிப்பேன் என கூறி இருந்தேன். மத்திய அரசு நிச்சயம் பாதுகாப்பு அளிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

    இதனை தொடர்ந்து பேரூர் ஆதீனம் அவர்களும் பட்டினப் பிரவேச நிகழ்வுக்கு விதித்த தடையை தமிழக அரசு நீக்கியுள்ளது தொடர்பாக நேற்று பேசினார் அவர் கூறியதாவது:

    மரபையும், பண்பாட்டையும், பாரம்பரியத்தையும் மதித்து தடை உத்தரவை நீக்கிய அரசுக்கு எங்களது வாழ்த்துக்களையும், மகிழ்ச்சிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். வருங்காலத்தில் இதுபோன்ற சிக்கல்களை தவிர்ப்பதற்காக, வரும் முன் காப்போம் என்ற அடிப்படையில், தீர்வு காணப்படும்.

    இதற்காக, தெய்வீக பேரவை என்ற அமைப்பையும் புதுப்பிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தமிழ் வழிபாட்டு பயிற்சிக்கு எல்லா வகையிலும், அனைத்து ஆதீனங்களும் துணை நிற்போம். இவ்வாறு அவர் கூறினார்.

    87 ஆவது வயதில் 10,12 வகுப்புகளில் தேர்ச்சி பெற்ற முன்னாள் முதலமைச்சர் – வயசுக்கும் கல்விக்கும் சம்மந்தம் அல்ல!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....