Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்உலக அளவில் உணவு பற்றாக்குறை ஏற்படும் அபாயம் - இந்தியா கைக்கொடுக்குமா?

    உலக அளவில் உணவு பற்றாக்குறை ஏற்படும் அபாயம் – இந்தியா கைக்கொடுக்குமா?

    உக்ரைன் மற்றும் ரஷ்யாவுக்கு இடையே போர் தொடர்வதால் உலக நாடுகளில் விலைவாசி உயர்ந்துள்ளது. பல நாடுகளில் உணவுப் பஞ்சம் ஏற்படும் அபாயமும் உள்ளது. இதனால் உலக நாடுகளுக்கு உணவுப் பொருட்களை அனுப்பும் பொறுப்பு இந்தியாவுக்கு அதிகரிக்கும் என்று தெரிகிறது.

    உக்ரைனில் தொடர்ந்து போர் நீடிப்பதாலும், ரஷ்யா மீது பொருளாதார தடை நீடிப்பதாலும் உலக நாடுகளில் பல்வேறு சிக்கல்கள் எழுந்துள்ளன. அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்துள்ளது.

    பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்ந்து வருகிறது. உலக அளவில் உணவுச் சங்கிலியில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உலக அளவில் கோதுமை ஏற்றுமதியில் முன்னிலை வகிக்கும் முதல் இரு நாடுகளாக ரஷ்யாவும், உக்ரைனும் திகழ்கின்றன.

    அதேபோல சர்வதேச சந்தையில் சூரிய காந்தி எண்ணெய் ஏற்றுமதியில், ரஷ்யாவும், உக்ரைனும் சர்வதேச சந்தையில் 55 சதவீதத்தை வைத்துள்ளன. ரஷ்யா, உக்ரைனின் பார்லி பொருள் ஏற்றுமதி அளவு 17 சதவீதமாகும். இந்த சப்ளை தற்போது அப்படியே அடி வாங்கியுள்ளது.

    ரஷ்யா போர் :

    நேட்டோ அமைப்பில் இணைய முயற்சித்தது மற்றும் மேற்கத்திய நாடுகளுடன் உறவு வைத்தது உள்ளிட்ட உக்ரைன் நடவடிக்கைகளால் ஆத்திரம் அடைந்த ரஷ்யா உக்ரைன் நாட்டின் மீது கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி போரைத் தொடங்கியது.

    உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடங்கி இன்றுடன் 76 நாட்கள் ஆகிவிட்ட நிலையில் போரின் தாக்கம் என்பது இன்றும் குறையாமல் உள்ளது. லட்சக்கணக்கான மக்கள் நாட்டை காலி செய்து விட்டு அகதிகளாக அண்டை நாடுகளில் தஞ்சமடைந்துள்ளனர்.

    இரண்டு மாதத்தை கடந்தும் போர் நடைபெற்று வரும் நிலையில், இதனால் பெரும் பொருட்சேதம் மற்றும் உயிர்சேதம் ஏற்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் உயிரிழந்துள்ளனர். முக்கிய துறைமுக நகரங்களை குறிவைத்து ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது.

    ரஷ்ய படைகள் ஏவுகணைகள் மூலம் நிகழ்த்திய தாக்குதலால் உக்ரைனின் துறைமுக நகரமான ஒடேசாவில் பல கட்டிடங்கள் உருக்குலைந்துள்ளன. ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் கிரிமியா தீபகற்பத்தில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணைகளால் பல அடுக்குமாடி கட்டிடங்கள் சேதமடைந்தோடு, அங்குள்ள வணிக வளாகம் ஒன்று தீப்பற்றி எரிந்தது.

    இதேபோல் உக்ரைனின் ஒடேசா உள்ளிட்ட முக்கிய துறைமுகங்களை ரஷ்ய படைகள் முற்றுகையிட்டதால் தானிய ஏற்றுமதி பாதிக்கப்பட்ட நிலையில், உணவு நெருக்கடியை தவிர்க்க உலக நாடுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி வலியுறுத்தியுள்ளார்.

    இது உக்ரைன் மட்டுமல்லாது பல்வேறு நாடுகளில் உணவுப் பற்றாக்குறையை ஏற்படுத்தும் எனவும் கூறியுள்ளார்.

    இதனைத் தடுக்க உலக நாடுகள் தலையிட்டு, ரஷ்ய தடுப்புகளை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜெலென்ஸ்கி வேண்டுகோள் விடுத்துள்ளார். உலகளவில் மக்காச்சோளம் ஏற்றுமதியில் உக்ரைன் 4வது இடத்திலும் கோதுமை ஏற்றுமதியில் 6வது இடத்திலும் உள்ளது.

    போர் காரணமாக உக்ரைனில் சுமார் 25 மில்லியன் டன் தானியங்கள் ஏற்றுமதி செய்யப்படாமல் இருப்பதாக ஐ.நா உணவு பிரிவு தெரிவித்துள்ளது.

    கடந்த வாரம்தான், அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் தொலைபேசியில் பிரதமர் நரேந்தி மோடி பேசியபோது, உலக நாடுகளுக்கு உணவுப் பொருட்களை சப்ளை செய்ய இந்தியா தயாராக இருப்பதாக தெரிவித்திருந்தார். ஆனால் அது சாத்தியமா என்பது விவாதத்துக்குரியதாகும்.

    இந்தியாவில் உணவு உற்பத்தி சிறப்பாகவே உள்ளது. மேலும் இந்திய மக்களுக்குத் தேவையான அளவுக்கு உணவுப் பொருட்கள் இருப்பில் உள்ளன. எனவே உலக நாடுகளுக்கும் உணவு கொடுக்க இந்தியா தயார் என பிரதமர் கூறியிருந்தார்.

    உலக வர்த்தக நிறுவனம் மட்டும் கேட்டுக் கொண்டால் அடுத்த நாளே ஏற்றுமதியை இந்தியா தொடங்கி விடும் என்றும் இந்தியா கருத்து தெரிவித்துள்ளது.

    பீட்ருட்ட கிள்ளிப் பார்த்து வாங்கனும்; கேரட்ட கீறிப் பார்த்து வாங்கனும்; மாம்பழத்த…..?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....