Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுபீட்ருட்ட கிள்ளிப் பார்த்து வாங்கனும்; கேரட்ட கீறிப் பார்த்து வாங்கனும்; மாம்பழத்த.....?

    பீட்ருட்ட கிள்ளிப் பார்த்து வாங்கனும்; கேரட்ட கீறிப் பார்த்து வாங்கனும்; மாம்பழத்த…..?

    கோடையில் வெயில் சுட்டெரிக்கும் அதே நேரத்தில், இனிக்கும் சுவையுடைய மாம்பழ சீசனும் துவங்கி விடும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மாம்பழத்தை விரும்பி சாப்பிடுவார்கள். ஏறக்குறைய 3 மாதங்களுக்கும் மேலாக மாம்பழம் கிடைக்கும். ஆனால், சிலர் மாம்பழங்களை செயற்கை முறையில் பழுக்க வைக்கின்றனர். அப்படியாக பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்களை சாப்பிட்டால் நமக்கு பக்க விளைவுகள் ஏற்படும் அபாயம் உள்ளது. அப்படி, செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்களை எப்படி கண்டறிவது என்ற தகவல்களை இங்கு காண்போம்.

    மாம்பழ சீசன் தொடங்கியுள்ளதால், சந்தைகளில் மாம்பழ விற்பனை களைகட்டியுள்ளது. ஆனால், விற்கப்படுவது ‘கார்பைடு’ கல்லால் செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழமா அல்லது இயற்கையாக பழுத்த மாம்பழமா எனத் தெரியாமல், பொதுமக்கள் தவிப்பில் உள்ளனர். இதனை, சில நுணுக்கங்களைப் பயன்படுத்தி மிக எளிதாக கண்டுபிடித்து விடலாம்.

    கார்பைடு கல்லால், செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்களின் தோல் மஞ்சள் நிறத்திலும், உள்ளே இருக்கும் சதைப்பகுதி வெண்மை நிறத்திலும் இருக்கும். இந்த மாம்பழங்களை சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு ஏற்படும் என்பதால், செயற்கை முறையில் மாம்பழங்களை பழுக்க வைக்க, அரசு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. குறுகிய காலத்தில் மாம்பழங்களை விற்று இலாபம் காண, மாங்காய்களை செயற்கை முறையில் பழுக்க வைத்து, மக்களின் உயிரோடு விளையாடுகின்றனர், வியாபாரிகள்.

    இயற்கை முறையில் மாம்பழங்களை பழுக்க வைப்பது குறித்து, மதுரை வேளாண் அறிவியல் மைய ஒருங்கிணைப்பாளர் இராமசுப்பிரமணியன் மற்றும் உதவி பேராசிரியர் வள்ளல்கண்ணன் ஒரு வழிமுறையைக் கூறியுள்ளனர். அதில், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் ‘எத்திரல்’ எனும் வளர்ச்சி ஊக்கியை அறிமுகப்படுத்தி உள்ளது. இதன் பெயரில் பல நிறுவனங்கள் திட, திரவம் மற்றும் வாயு வடிவில் இந்த வளர்ச்சி ஊக்கியைத் தயாரிக்கின்றன.

    எத்திரல் வளர்ச்சி ஊக்கியை, வாழைப்பழத்திற்கும் மாம்பழங்களுக்கும் திரவ வடிவத்தில் பயன்படுத்தலாம். ஒரு லிட்டர் அளவு தண்ணீரில் 100 மி.லிட்டர் ‘எத்திரல்’ திரவத்தைக் கலந்து, அதனுள் ஒவ்வொரு மாம்பழத்தையும் குறைந்தது 10 வினாடிகள் மூழ்கவைத்து எடுத்தால், இரண்டு நாட்களில் மாம்பழங்கள் முழுவதுமாக இயற்கையான முறையில் பழுத்து விடும். உள்ளிருக்கும் சதைப்பகுதியும் பழமாகி விடும். இந்த முறையில் மாம்பழங்களை பழுக்க வைத்தால், உடலுக்கு கெடுதல் இருக்காது. இதனைப் பயன்படுத்துவது நல்லது என்றும் வேளாண் அறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

    தொடர்ந்து சரியும் பங்குச்சந்தைகள்; வீழ்கிறது ரூபாய் மதிப்பு!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....