Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுபுஷ்பா திரைப்பட பாணியில் செஞ்சந்தனம் கடத்தல்; பிடிபட்ட தமிழர்கள்!

    புஷ்பா திரைப்பட பாணியில் செஞ்சந்தனம் கடத்தல்; பிடிபட்ட தமிழர்கள்!

    செஞ்சந்தனம் எனப்படும் செம்மரங்களை வெட்டுதல் மற்றும் கடத்துதல் தொடர்பாக பல புகார்கள் அடிக்கடி வந்து கொண்டே தான் இருக்கிறது. இப்படியான சூழலில், ஆந்திர மாநிலத்தில் செம்மரங்களை வெட்டியதாக, தமிழகத்தைச் சேர்ந்த 7 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆந்திர மாநிலத்தில் உள்ள சித்தூரில், வாகனத் தணிக்கையில் காவல் துறையினர் ஈடுபட்டிருந்த போது, கிட்டத்தட்ட ரூ. 3 கோடி மதிப்புள்ள செம்மரக் கட்டைகளை பறிமுதல் செய்துள்ளனர்.

    ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம் திருப்பதி சேஷாசலத்தில் வனப்பகுதிகள் உள்ளது. இங்கிருந்து செம்மரக்கட்டைகளை சிலர் கடத்தி வருகிறார்கள் என சித்தூர் ரூரல் சர்க்கிள் காவல் நிலையத்திற்கு நேற்று ரகசியத் தகவல் கிடைத்துள்ளது.

    கிடைத்த தகவலைத் தொடர்ந்து, காவல் துறையினர் சித்தூர் – ராணிப்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள எம்.சி.ஆர் சர்க்கிள் அருகே, தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது, அந்த வழியாக அதிகமான வேகத்தில் கார் ஒன்று வந்துக் கொண்டிருந்தது. இதனைப் பார்த்த காவல் துறையினர் சந்தேகம் அடைந்தனர். வேகமாக வந்த காரை உடனடியாக தடுத்து நிறுத்தினர். ஆனால், கார் அங்கு நிற்காமல் வேகமாக சென்றுவிட்டது. காரைப் பின் தொடர்ந்து சென்ற காவல் துறையினர் அவர்களை மடக்கிப் பிடித்தனர்.

    காரில் இருந்த இரண்டு நபர்களை, காவல் துறையினர் கைது செய்தனர். பின், காரை சோதனை செய்ததில், அதில் செம்மரக்கட்டைகள் இருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். மேலும், காரில் இருந்த நபரை காவல் துறையினர் விசாரணை செய்ததில், பின்னால் வரும் இரண்டு வாகனங்களிலும் செம்மரக்கட்டைகளை கடத்தி வருகிறார்கள் என்ற தகவல் கிடைத்தது.

    இதனைத் தொடர்ந்து காவல் துறையினர், அந்த வழியாக வந்த அனைத்து வாகனங்களையும் சோதனை செய்தனர். தொடர் சோதனையில், ஒரு மினி வேன் மற்றும் ஒரு கார் ஆகிய இரண்டு வாகனங்களில், செம்மரக்கட்டைகள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இரண்டு வாகனங்களிலும் இருந்த 5 பேரை கைது செய்தனர், காவல் துறையினர். இச்சம்பவம் தொடர்பாக மொத்தம் 7 நபர்களை காவல்துறை கைது செய்துள்ளது. இவர்களிடம் இருந்து மூன்று வாகனங்கள் உள்பட, 2720 கிலோகிராம் எடை கொண்ட 89 செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்தனர்.

    காவல் துறை விசாரணையில், 7 நபர்களும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

    அவர்களின் பெயர்கள்:
    • கோவிந்தசாமி எனும் சேட்டு (வயது 44)
    • முருகேசன் எனும் ஞானபிரகாசம் (வயது 50)
    • பெருமாள் வெங்கடேஷ் (வயது 44)
    • கரியா ராமன் (வயது 27)
    • குலஞ்ஜன் (வயது 36)
    • வெங்கடேஷ் (வயது 37)
    • கோவிந்தராஜ் (வயது 21)

    மேலும், விசாரணை செய்ததில் தமிழகத்தைச் சேர்ந்த நான்கு பேரும், ஆந்திராவின் சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த 3 பேரும் இவர்கள் செம்மரக்கட்டையை கடத்துவதற்கு உடந்தையாக இருந்துள்ளனர் என்பது தெரிய வந்ததுள்ளது.

    உடந்தையாக இருந்த 7 நபர்களும் தற்போது தலைமறைவாக இருக்கிறார்கள். அவர்கள் ஏழு பேரையும் மிக விரைவில் காவல் துறையினர் கைது செய்வார்கள் என்று சித்தூர் மாவட்ட எஸ்.பி. ரிசாந்த் ரெட்டி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

    கடும் வீழ்ச்சியில் ரூபாய் மதிப்பு: பிரதமரை கலாய்க்கும் விதமாக விமர்சிக்கும் காங்கிரஸ்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....