Friday, March 15, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்உக்ரைனிலிருந்து 1.40 கோடி மக்கள் இடம்பெயர்வு; ஐ.நா. அதிர்ச்சி தகவல்

    உக்ரைனிலிருந்து 1.40 கோடி மக்கள் இடம்பெயர்வு; ஐ.நா. அதிர்ச்சி தகவல்

    உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடங்கியதிலிருந்து 1.40 கோடி பொதுமக்கள் தங்கள் வீடுகளை இழந்து வேறு இடத்திற்கு இடம்பெயர்ந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. 

    கடந்த பிப்ரவரி மாதம் முதல் தொடர்ந்து உக்ரைன் மீது போர் தொடுத்து வருகிறது. இந்தப் போரினால் உக்ரைன் நாடு முழுவதும் பல்வேறு உயிர்ச்சேதங்களும் பொருட் சேதங்களும் ஏற்பட்டு வருகின்றன. 

    இந்நிலையில், உலகம் முழுவதும் 10 கோடிக்கும் அதிகமான மக்கள் அகதிகளாக இருப்பதாக ஐ.நா கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. 

    இது தொடர்பாக ஐ.நா கூட்டமைப்பில் அகதிகளுக்கான உயர் ஆணையரான பிலிப்போ கிராண்டி நேற்று நடைபெற்ற ஐ.நா. கூட்டத்தில் பேசுகையில், 

    பிப்ரவரி மாதம் உக்ரைன் போர் தொடங்கப்பட்டதிலிருந்து இதுவரை அந்நாட்டுமக்கள் 14 மில்லியன் அளவில் தங்களது வீடுகளை விட்டு வெளியேறியுள்ளதாகவும், சென்ற ஆண்டுகளில் இதுபோன்ற அதிக எண்ணிக்கையிலான பொதுமக்கள் இடம்பெயர்ந்து வருவது இதுவே முதல் முறை என்று பதிவு செய்தார். 

    உலகின் மிகக் கடுமையான குளிர்காலங்களில் ஒன்றை இந்த ஆண்டு உக்ரைன் மக்கள் சந்திக்க உள்ளதாகவும், இந்த நாட்டில் இருந்து இடம்பெயர்ந்த மக்களுக்கு உதவுவதில் கவனம் அதிகரித்து இருப்பதாகவும் தெரிவித்தார். 

    தொடர்ந்து அவர், ஐரோப்பிய ஒன்றியத்தில் அகதிகளாக அனுமதி அளித்துள்ளனர் என்றும் மனிதாபிமான நிறுவனங்கள் தங்களின் பங்கை இன்னும் அதிகரிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

    இதையும் படிங்க: இல.கணேசனின் குடும்ப விழா; வருகை புரிந்த மம்தா, ஸ்டாலின் – காரணம் என்ன?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....