Friday, March 15, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்இல.கணேசனின் குடும்ப விழா; வருகை புரிந்த மம்தா, ஸ்டாலின் - காரணம் என்ன?

    இல.கணேசனின் குடும்ப விழா; வருகை புரிந்த மம்தா, ஸ்டாலின் – காரணம் என்ன?

    பாஜக-வில் முக்கிய பதவிகளை வகித்த இல.கணேசன் இல்ல நிகழ்ச்சியில் எதிர்கட்சி தலைவர்கள் பங்கேற்றுள்ள சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. 

    மேற்கு வங்க ஆளுநர் இல.கணேசனின் அண்ணன் கோபாலனின் 80-வது பிறந்தநாள் விழா இன்று சென்னையில் உள்ள கோடம்பாக்கத்தில் நடைபெற்றது. மிக முக்கிய அரசியல் புள்ளியாக திகழும் ஆளுநர் இல.கணேசனின் குடும்ப விழாவிற்கு ஏராளமான அரசியல் தலைவர்கள் வருகை புரிவார்கள் என்று முன்பே தெரிவிக்கப்பட்டது. 

    அதுபோலவே, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், தெலுங்கான ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன், டி. ஆர். பாலு உள்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள்  பங்குபெற்றனர். விழாவின்போது, மம்தா பானர்ஜியும் ரஜினிகாந்தும் ஒருவருக்கொருவர் பரஸ்பர வணக்கத்தை தெரிவித்துக்கொண்டனர். 

    இல.கணேசனின் குடும்ப விழாவில் கலந்துக்கொள்ள நேற்றே சென்னை விரைந்தார், மம்தா பானர்ஜி. சென்னை வந்ததும், முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து உரையாடினார். இதன்பின்பு, இன்று காலை இல.கணேசனின் இல்ல விழாவில் அவர் கலந்துக்கொண்டார். இதைத்தொடர்ந்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் இவ்விழாவில் கலந்துக்கொண்டார். 

    பாஜக-வில் பல்வேறு முக்கிய பதவிகளை வகித்த இல.கணேசனின் இல்ல விழாவிற்கு எதிர் கட்சிகளைச் சேர்ந்த மம்தா பானர்ஜி மற்றும் மு.க.ஸ்டாலின் வருகைத் தந்துள்ளது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. மேற்கு வங்கத்தை பொறுத்தவரையில், ஆளுநருக்கும், முதல்வருக்கும் சுமூகமான உறவே நீடிக்கிறது. ஆதலால்தான், இந்த விழாவிற்கு மம்தா பானர்ஜி வருகைத் தந்துள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. 

    மேலும், தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி குடும்பத்துடன் காலங்கடந்து நட்புணர்வை பகிர்ந்து வருவதால் மு.க.ஸ்டாலின் இவ்விழாவில் பங்கேற்றுள்ளதாக கூறப்படுகிறது.

    இதையும் படிங்க: முதல்வர் ஸ்டாலினுக்கு ‘கொல்கத்தா ஸ்வீட்’ மம்தாவுக்கு ‘புத்தகம்’… கைமாறிய பரிசுகளும், பரஸ்பர அன்பும் !

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....