Friday, March 15, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்முதல்வர் ஸ்டாலினுக்கு 'கொல்கத்தா ஸ்வீட்' மம்தாவுக்கு 'புத்தகம்'... கைமாறிய பரிசுகளும், பரஸ்பர அன்பும் !

    முதல்வர் ஸ்டாலினுக்கு ‘கொல்கத்தா ஸ்வீட்’ மம்தாவுக்கு ‘புத்தகம்’… கைமாறிய பரிசுகளும், பரஸ்பர அன்பும் !

    சென்னை வந்த மம்தா பானர்ஜி மு.க.ஸ்டாலினை சந்தித்துவிட்டு, இல.கணசேன் இல்ல விழாவிற்கு சென்றார். 

    முன்னாள் பாஜக தலைவரும், மேற்கு வங்க ஆளுநர் இல.கணேசனின் அண்ணன் கோபாலனின் 80-வது பிறந்தநாள் விழாவில் கலந்துகொள்வதற்காக, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி இரண்டு நாள் பயணமாக சென்னை வந்துள்ளார். சென்னை வந்த மம்தா பானர்ஜி ஆழ்வார்ப்பேட்டையிலுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் இல்லத்திற்கு நேற்று நேரில் சென்றார்.

    அப்போது, மம்தா பானர்ஜியை பூங்கொத்து கொடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்றார். அதனைத் தொடர்ந்து தமிழக முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் படத்தை வணங்கி மரியாதை செய்தார். அதனைத் தொடர்ந்து அவருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நினைவுப் பரிசு வழங்கினார். இதேபோன்று முதல்வர் மு.க.ஸ்டாலின், மம்தா பானர்ஜிக்கு புத்தகங்களை பரிசாக அளித்தார். மம்தா பானர்ஜி தான் குடுவையில் கொண்டுவந்த கொல்கத்தா இனிப்புகளை பரிசாக மு.க.ஸ்டாலினுக்கு வழங்கினார். 

    இதனிடையே, சுமார் அரை மணிநேரத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் மம்தா பானர்ஜி கலந்துரையாடினார். இந்த உரையாடலில், மாநிலங்களின் வளர்ச்சி மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது. 

    இந்நிலையில், இன்று காலை மம்தா பானர்ஜி இல. கணேசனின் இல்ல விழாவிற்கு சென்றார். அங்கு மம்தா பானர்ஜிக்கு கேரள செண்டை மேளத்துடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போதும், மம்தா பானர்ஜி செண்டை மேளத்தை வாங்கிய மம்தா, கலைஞர்களுடன் இணைந்து மேளத்தை வாசித்தார். இந்நிகழ்வு அங்கிருந்தவர்களை வியப்பில் ஆழ்த்தியது. 

    இதையும் படிங்க: இங்க ‘கரண்ட் பில்லுக்கு குட் பாய்’ அதே கரண்ட் மூலமே வருவாய்! இந்தியாவின் ‘முதல் சோலார் கிராமம்’

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....