Friday, March 15, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்நண்பரின் பாஸ்வேர்டை பயன்படுத்துபவரா நீங்கள்? நெட்ஃபிளிக்ஸின் கவலை தரும் அதிரடி அறிவிப்பு..!

    நண்பரின் பாஸ்வேர்டை பயன்படுத்துபவரா நீங்கள்? நெட்ஃபிளிக்ஸின் கவலை தரும் அதிரடி அறிவிப்பு..!

    பாஸ்வேர்டை குடும்பத்தினர் அல்லது நண்பர்களுக்கு பகிர வேண்டுமென்றால், அதற்காக இணை கணக்கு கட்டணம் செலுத்த வேண்டும் என நெட்ஃபிளிக்ஸ் அறிவித்துள்ளது. 

    அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி நிறுவனம், திரைப்படங்களையும், தொடர்களையும் வெளியிட்டு வருகிறது. உலகெங்கும் கோடிக்கணக்கில் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தை மக்கள் உபயோகித்து வருகின்றனர். இந்த தளத்திற்கென பலகோடி ரசிகர்கள் உள்ளனர். 

    கொரோனா காலக்கட்டத்திலிருந்து ஓடிடி தளங்கள் பெருமளவில் வளர்ச்சியை சந்தித்தன. உலகச் சந்தையில் நெட்ஃபிளிக்ஸ் தனது காலடித்தடத்தை வலுவாகவே படைத்தது என்று சொல்லலாம். 

    இந்நிலையில், தற்போது நெட்ஃபிளிக்ஸ் தனது பயனர்களுக்கு ஒரு அதிர்ச்சிகரமான தகவலை தெரிவித்துள்ளது. அதன்படி, இனி பாஸ்வேர்டைப் பிறருடன் பகிரமுடியாது என்று நெட்ஃபிளிக்ஸ் தெரிவித்துள்ளது. பொதுவாக, நெட்ஃபிளிக்ஸ் தளத்தை ஒருவர் ரீசார்ஜ் செய்துவிட்டு, அதன் பாஸ்வேர்டை பிறருடன் பகிர்ந்துகொள்வர். இதன்மூலம், மற்றவர்களும் நெட்ஃபிளிக்ஸ் தளத்தை உபயோகிப்பர்.

    ஆனால், தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி, நெட்ஃபிளிக்ஸ் வாடிக்கையாளர்கள், தங்களது பாஸ்வேர்டை குடும்பத்தினர் அல்லது நண்பர்களுக்கு பகிர வேண்டுமென்றால், அதற்காக இணை கணக்கு கட்டணம் செலுத்த வேண்டியது வரும் என்று தெரிவித்துள்ளது. 

     மேலும், இந்த விதிமுறையானது 2023-ம் ஆண்டின் தொடக்கத்திலிருந்து நடைமுறைக்கு வருமென்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

    இதையும் படிங்க: தஞ்சையில் கொட்டும் மழையிலும் ‘சதய விழா’ தண்ணீருக்கு நடுவில் அமர்ந்து பொதுமக்கள் ரசிப்பு

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....