Friday, March 15, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாகாற்று மாசுபாடு எதிரொலி: சுவாசப்பிரச்சனை, கட்டுமானப்பணிகள் நிறுத்தம், பேராபத்தில் தில்லி..!

    காற்று மாசுபாடு எதிரொலி: சுவாசப்பிரச்சனை, கட்டுமானப்பணிகள் நிறுத்தம், பேராபத்தில் தில்லி..!

    தில்லியில் பொதுமக்கள் சுவாசிக்க முடியவில்லை எனக் கூறி வருவது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

    நாட்டின் தலைநகரான தில்லியில் கடந்த சில தினங்களாகவே காற்று மாசுபாடு அதிகரித்து வருகிறது. குறிப்பாக காற்றின் தரக் குறியீடு எண் மிகவும் மோசமான நிலைக்கு சென்றுள்ளது. 

    தில்லி அரசும் இதனைக் குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் தற்போது, கட்டுமானப் பணிகளை முழுமையாக நிறுத்தி வைக்குமாறு அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. 

    இதையும் படிங்க: பொறியாளர்களுக்கான வேலை வாய்ப்பு: தேசிய அனல் மின் நிறுவனம் அறிவிப்பு

    என்னதான் தில்லி அரசு தீபாவளி அன்று பட்டாசு வெடிக்க தடை விதித்திருந்தாலும், கள்ள சந்தையில் பட்டாசுகள் விற்கப்பட்டு வெடிக்கப்பட்டதாகவும், அதனால் மாசு அதிகரித்து இருக்கலாம் எனவும் சொல்லப்படுகிறது. 

    இதனிடையே, குழந்தைகளின் நலன்கருதி குழந்தைகள் நல வாரியமும் பள்ளிகளை உடனடியாக மூட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளது. குறிப்பாக 10 நபர்களில் 8 பேருக்கு சுவாசப் பிரச்சனை இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

    இந்தக் காற்று மாசுபாடு தற்போது தில்லி மட்டுமின்றி அண்டை மாநிலங்களான பஞ்சாப், ஹரியானா போன்றவற்றையும் பாதிக்க ஆரம்பித்துள்ளது. 

    முன்னதாக நேற்று தில்லி சுகாதாரத்துறை அமைச்சர், வீட்டிலிருந்து வேலை பார்க்குமாறு தனியார் நிறுவன ஊழியர்களைக் கேட்டுக்கொண்டார். 

    இதையும் படிங்க: குஜராத்தில் 2 கட்டங்களாக நடைபெறும் சட்டமன்றத் தேர்தல்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....