Friday, March 15, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாகுஜராத்தில் 2 கட்டங்களாக நடைபெறும் சட்டமன்றத் தேர்தல்

    குஜராத்தில் 2 கட்டங்களாக நடைபெறும் சட்டமன்றத் தேர்தல்

    குஜராத் சட்டமன்றத் தேர்தலுக்கான அட்டவணையை தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார் இன்று வெளியிட்டுள்ளார். 

    இந்தமுறை குஜராத் சட்டமன்ற தேர்தல் டிசம்பர் 1 மற்றும் டிசம்பர் 5 என இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. 

    இந்தத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 8 ஆம் தேதி நடைபெறும். இந்நிலையில் குஜராத் சட்டமன்றத் தேர்தலுக்கான அறிவிப்பை தேர்தல் ஆணையர்கள் இன்று வெளியிட்டுள்ளனர். 

    தில்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தலைமை ஆணையர் , குஜராத் சட்டமன்றத் தேர்தலில் புதிதாக 4.6 லட்சம் வாக்காளர்கள் புதிதக வாக்களிக்க உள்ளதாகவும், மாநிலம் முழுவதும் மொத்தம் 51,782 வாக்குச்சாவடிகளில் 4.90 கோடி பேர் வாக்களிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 

    மேலும் அவர், டிசம்பர் 1 ஆம் தேதி நடைபெறும்  முதற்கட்ட வாக்குப்பதிவு 89 தொகுதிகளிலும், டிசம்பர் 5 ஆம் தேதி நடைபெறும் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு 93 தொகுதிகளிலும் நடைபெற உள்ளதாக கூறினார். 

    தொடர்ந்து அவர், முதர்க்கட்ட தேர்தலுக்கான வேட்புமனுக்களை தாக்கல் செய்ய நவம்பர் 5 ஆம் தேதி வரையும், இரண்டாம் கட்ட தேர்தலுக்கு நவம்பர் 10 தேதியும் தொடங்க உள்ளதாகவும், வேட்புமனுக்களை திரும்ப பெற முதற்கட்ட தேர்தலுக்கு நவம்பர் 17 ஆம் தேதியும், இரண்டாம் கட்ட தேர்தலுக்கு நவம்பர் 21 ஆம் தேதியும் கடைசி நாளாகும் எனத் தெரிவித்தார். தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை டிசம்பர் மாதம் 8 ஆம் தேதி நடைபெறும் எனவும் குறிப்பிட்டார். 

    இதனிடையே குஜராத் மற்றும் ஹிமாச்சல் ஆகிய இரு மாநிலங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஹிமாச்சல் பிரதேசத்துக்கு நவம்பர் 12 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

    குஜராத்தில் தற்போது பாஜக ஆட்சி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. 

    இதையும் படிங்க: இங்க ‘கரண்ட் பில்லுக்கு குட் பாய்’ அதே கரண்ட் மூலமே வருவாய்! இந்தியாவின் ‘முதல் சோலார் கிராமம்’

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....