Friday, March 15, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுகோவை கார் வெடிப்பு சம்பவம்; கண்காணிப்பு வளையத்துக்குள் 900 பேரை கொண்டு வந்தது எப்படி..?!

    கோவை கார் வெடிப்பு சம்பவம்; கண்காணிப்பு வளையத்துக்குள் 900 பேரை கொண்டு வந்தது எப்படி..?!

    கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் சந்தேகத்தின் அடிப்படையில் 900 பேரை கண்டறிந்து அவர்களை கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வந்துள்ளனர். 

    கோவை கார் வெடிப்பு சம்பவம் கடந்த மாதம் 23 ஆம் தேதி நடைபெற்றது. இதில் ஜமேஷா முபீன் என்பவர் உயிரிழந்தார். இவரின் திட்டங்கள் ஒவ்வொன்றாக தமிழக காவல்துறையும் புலனாய்வு குழுவும் கண்டறிந்து வருகின்றனர். 

    இதையடுத்து இந்தச் சம்பவம் தொடர்பாக ஜமேஷா முபீன் உறவினர் மற்றும் நண்பர்கள் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

    இதனிடையே தேசிய புலனாய்வு குழுவினர் சம்பவம் நடந்த கோட்டை ஈஸ்வரன் கோயில் பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். உயிரிழந்த முபீன் வாடகைக்கு வசித்த வந்த வீடு 350 மீட்டர் தொலைவில் மட்டுமே உள்ளது. அதேபோல் இவர் ஈஸ்வரன் கோயில் பகுதியில் பலமுறை சுற்றி திரிந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

    இதையும் படிங்க: நண்பரின் பாஸ்வேர்டை பயன்படுத்துபவரா நீங்கள்? நெட்ஃபிளிக்ஸின் கவலை தரும் அதிரடி அறிவிப்பு..!

    இதன்காரணமாக, அங்குள்ள கடைகள் வணிக வளாகங்கள், வீடுகள் என அனைத்து பகுதி கேமராக்களையும் ஆய்வு செய்தனர். இதனை ஆதாரங்களாக கைப்பற்றியுள்ளனர். 

    மேலும் முபீனின் செல்போன் கைப்பற்றப்பட்டு, அவர் யார் யாருக்கு கால் பேசியுள்ளார். அவரது செல்போனில் என்னென்ன உள்ளன என்பனவற்றை ஆராய்ந்து வருகின்றனர். 

    இதைத்தொடர்ந்து தற்போது, சந்தேகத்தின் அடிப்படையில் தடை செய்யப்பட்ட இயக்கங்களைச் சேர்ந்த 900 பேரை கண்டறிந்து அவர்களை கண்காணிப்பு வளையத்துக்குள் காவல்துறையினர் கொண்டு வந்துள்ளனர். 

    இதுவரை தமிழகம் முழுவதும் இந்தச் சம்பவம் தொடர்பாக 137 இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டுள்ளது. 

    இதனிடையே கோட்டை ஈஸ்வரன் கோயிலுக்கு சென்ற ஜமாத் நிர்வாகிகள் கோவை கார் வெடிப்பு போன்ற எந்தவித பயங்கரவாதத்திற்கும் இடம் தரமாட்டோம் என மத நல்லிணக்க கூட்டம் நடத்தி அறிவித்தது குறிப்பிடத்தக்கது. 

    இதையும் படிங்க: பொறியாளர்களுக்கான வேலை வாய்ப்பு: தேசிய அனல் மின் நிறுவனம் அறிவிப்பு

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....