Friday, March 15, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுடி 20 உலகக்கோப்பை: பதுங்கி பாய்ந்த பாகிஸ்தான்.., தப்புமா தென்னாப்பிரிக்கா?

    டி 20 உலகக்கோப்பை: பதுங்கி பாய்ந்த பாகிஸ்தான்.., தப்புமா தென்னாப்பிரிக்கா?

    இருபது ஓவர் உலகக் கோப்பையின் இன்றைய ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு 186 ரன்களை இலக்காக பாகிஸ்தான் நிர்ணயம் செய்துள்ளது. 

    2022-ம் ஆண்டிற்கான உலகக் கோப்பை தொடரில் இன்று சிட்னியில் நடைபெற்று வரும் ஆட்டத்தில் பாகிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில், டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதன் மூலம் தென்னாப்பிரிக்க அணி பந்துவீச்சை மேற்கொண்டது. 

    பாகிஸ்தான் அணி முதல் ஓவரிலேயே தொடக்க ஆட்டக்காரரான ரிஸ்வானை 4 ரன்களுக்கு இழந்தது. இதன் பின்பு களமிறங்கிய முகமது ஹாரிஸ் 28 ரன்கள் எடுத்திருந்த நிலையில் பெவிலியன் நோக்கி திரும்பினார். இதைத்தொடர்ந்து, 

    கேப்டன் பாபர் ஆஸமை 6 ரன்களுக்கு வெளியேறியது. இதைத்தொடர்ந்தும் விக்கெட்டுகள் விழுந்த வண்ணம் இருந்தன. 13-வது ஓவரின் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 95 ரன்கள் எடுத்து சற்று தடுமாறியது பாகிஸ்தான். 

    இதன்பிறகுதான், மாயாஜாலம் நிகழ்ந்தது. ஆம், 6-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஷதாப் கானும் இஃப்திகாரும் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்தக் கூட்டணி மட்டுமே 6 ஓவர்களில் 82 ரன்கள் அடித்து அனைவரையும் வியக்க வைத்தது. மொத்ததில் இருபது ஓவர்கள் முடிவில், பாகிஸ்தான் அணி  9 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் எடுத்தது. தற்போது தென்னாப்பிரிக்கா அணி 186 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடி வருகிறது. 

    இதையும் படிங்க: பொறியாளர்களுக்கான வேலை வாய்ப்பு: தேசிய அனல் மின் நிறுவனம் அறிவிப்பு

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....