Tuesday, May 16, 2023
மேலும்
  Homeஜோதிடம்மே மாத முதல் வாரத்தின் ராசிபலன் – தனுசு முதல் மீனம் வரை! கவனமா இருங்க...

  மே மாத முதல் வாரத்தின் ராசிபலன் – தனுசு முதல் மீனம் வரை! கவனமா இருங்க கண்ணுங்களா!

  தனுசு:

  நீங்கள் நம்பிக்கை மற்றும் உறுதியுடன் செயல்பட வேண்டும். பல இடங்களில், உங்கள் பொறுமை சோதிக்கப்படும். திட்டமிட்டு செயல்படுவது உங்களுக்கு நன்மையை தருவதாக அமையும்.

  பிரார்த்தனையில் ஈடுபடுவது மற்றும் மந்திரங்களை கேட்பது மன அமைதியை ஏற்படுத்தும். எதிர்பார்க்கும் பலன் கிடைக்க நீங்கள் அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும். நீங்கள் அதிகமாக வேலை செய்வதன் மூலம் உங்கள் திறமையை உணர முடியும்.

  இதனால் பதவி உயர்வு வடிவத்தில் பாராட்டுகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. நிதி வளர்ச்சி சிறப்பாக காணப்படும். கடின முயற்சி மூலம் தான் நீங்கள் பலனை அதுவும் தாமதமாகத் தான் அடைய முடியம்.

  உங்கள் துணையிடம் நேர்மையான அணுகுமுறையை கையாள்வீர்கள். அவருடன் நீங்கள் அன்பு பாராட்டி பழகுவீர்கள். இது குடும்பத்தில் ஆரோக்கியமான சூழ்நிலையை உருவாக்கும்.

  வலிமை மற்றும் ஆற்றல் காரணமாக சிறந்த ஆரோக்கியத்தை பராமரிப்பீர்கள். பக்தியும் பிரார்த்தனையும் உங்களை மகிழ்ச்சியான மனநிலையில் வைத்திருக்கும்.

  மகரம்:

  உங்கள் வாழ்வில் செழிப்பைக் காண்பதற்கு நீங்கள் உங்கள் எதிர்காலத்தை நல்ல முறையில் திட்டமிடல் வேண்டும். உங்கள் செயல்களில் உறுதியுடனும் நேர்மறையாகவும் இருங்கள். எதிர்மறை எண்ணங்களை தவிர்த்தல் நலம்.

  பணிச்சுமை அதிகமாக காணப்படும். உங்கள் பணிகளை மேற்கொள்ளும் பொழுது நீங்கள் தடைகளை சந்திக்க நேரலாம். பண வரவு அதிகமாக காணப்படும். தேவையான சமயத்தின் போது உங்களிடம் பணம் இருக்கும். பணத்தை பயனுள்ள வகையில் செலவு செய்வீர்கள்.

  உங்கள் துணையுடன் மகிழ்ச்சியான நினைவுகளை பகிர்ந்து கொள்வீர்கள். உங்கள் துணையுடன் உறவில் நல்லிணக்கம் காணப்படும். பெரிய அளவிலான ஆரோக்கியக் குறைபாடுகள் காணப்படாது. ஆனால் சிறிது சோர்வுடன் காணப்படுவீர்கள்.

  கும்பம்:

  ஆன்மீக காரியங்களில் உங்களை ஈடுபடுத்திக் கொள்வது உங்களுக்கு மகிழ்ச்சியையும் திருப்தியையும் அளிக்கும். அதன் முலம் நீங்கள் முன்னேற்றத்தைக் காண்பீர்கள்.

  ஒரு சில பிரச்சினைகளை சந்திக்க நேரும் என்பதால் பொறுமையும் மன உறுதியும் அவசியம். சிக்கலான சூழ்நிலையை சமாளிக்க நேர்மறையான எண்ணங்களும் அவசியம்.

  உங்கள் சக பணியாளர்கள் மற்றும் மேலதிகாரிகளிடம் நல்லுறவு பராமரிக்க முடியாது. மோதல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் சிறிது குழப்பம் ஏற்படும். பணிகளை பொறுமையாகக் மற்றும் கவனத்துடன் கையாள வேண்டும்.

  வார இறுதியில் பணவரத்துக்கான வாய்ப்பு அதிகம்.பணத்தை பயனுள்ள வகையில் நல்ல காரியங்களுக்கு பயன் செய்வீர்கள். உங்கள் துணையிடம் நட்பான அணுகுமுறை மேற்கொள்வீர்கள். இதனால் உறவில் நல்லிணக்கம் காணப்படும்.

  மனக் குழப்பம் காரணமாக ஆரோக்கியக் குறைபாடு காணப்படும். கால் வலி மற்றும் கணுக்கால் வலி ஏற்பட வாய்ப்புள்ளது.

  மீனம்:

  உங்களது நாள் முற்போக்கான நாளாக அமைய நீங்கள் தொடர்ந்து முயற்சி செய்ய வேண்டும். கவலையை விட்டொழித்து நம்பிக்கையுடன் இருங்கள். முடிந்த அளவு பொறுமையை கடைபிடியுங்கள்.

  உங்களுக்கு கொடுத்த பணிகளை குறித்த நேரத்திலோ அல்லது அதற்கு முன்போ முடிப்பீர்கள். மிகுந்த உற்சாகத்துடன் பணிகளை முடிப்பீர்கள். பண இழப்பிற்கான வாய்ப்புகள் உள்ளது. அஜாக்கிரதை மற்றும் கவனக்குறைவு காரணமாக நீங்கள் பணத்தை இழக்க நேரிடலாம்.

  குடும்ப பிரச்சினை ஒன்றின் காரணமாக உங்கள் துணையுடன் கருத்து வேறுபாடு ஏற்படும். இதனைத் தவிர்க்க நட்பான அணுகுமுறை வேண்டும்.

  ஆரோக்கியம் சிறந்து காணப்படும். யோகா மேற்கொள்வது நல்ல பலனைத் தரும்.

  மே மாத முதல் வாரத்தின் ராசிபலன் – மேஷம் முதல் கடகம் வரை! இதை செய்யுங்கள் ரிலாக்‌ஸாக இருங்கள்!

  மே மாத முதல் வாரத்தின் ராசிபலன் – சிம்மம் முதல் விருச்சிகம் வரை!

  இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
  - Advertisment -

  Must Read

  காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

  சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....