Monday, March 18, 2024
மேலும்
  Homeஜோதிடம்மே மாத முதல் வாரத்தின் ராசிபலன் - சிம்மம் முதல் விருச்சிகம் வரை!

  மே மாத முதல் வாரத்தின் ராசிபலன் – சிம்மம் முதல் விருச்சிகம் வரை!

  சிம்மம்:

  சிம்ம ராசி அன்பர்கள் தங்கள் வாழ்வில் ஏற்ற இறக்க நிலை காண்பார்கள். வார துவக்கத்தில், உற்சாகமாக காணப்படுவீர்கள். அதனால் திருப்தி ஏற்படும். உங்கள் இலக்குகளில் வெற்றி அடைவீர்கள்.

  அதே போன்று வார இறுதியில் உங்களுக்கான நாளை உங்களுக்கு சாதகமாக்கிக் கொள்ள பொறுமை தேவை. சில அசௌகரியங்கள் காணப்படும். சரியான திட்டங்களை வகுத்து அதனை உரிய நேரத்தில் செயலாற்ற வேண்டியது அவசியம்.

  உங்கள் பணியில் தொழில் சார்ந்த அணுகுமுறை மேற்கொள்வீர்கள். இந்தப் போக்கு உங்களுக்கு அதிர்ஷ்டத்தை அளிக்கும். உங்கள் துணையிடம் நேர்மையாக நடந்து கொள்வீர்கள். இதனால் இருவரிடையே நல்லுறவு காணப்படும்.

  உங்களிடம் காணப்படும் ஆற்றல் காரணமாக இன்று பொதுவாக ஆரோக்கியம் சிறப்புடன் காணப்படும்.

  கன்னி:

  உங்களிடம் காணப்படும் பயம் காரணமாக உங்கள் தன்னம்பிக்கை குறைந்து காணப்படும். ஆதனால் உங்கள் முன்னேற்றத்தில் தடை இருக்கும். முக்கியமான முடிவுகள் எடுப்பதை வார துவக்கத்தில் தவிர்ப்பது நல்லது.

  நீங்கள் உங்கள் வருங்காலத்திலும் முன்னேற்றத்திலும் கவனம் செலுத்துவது அவசியம். பணப்புழக்கம் உற்சாகமளிக்கும் வகையில் காணப்படாது. கூடுதல் செலவினங்கள் செய்ய நேரிடும்.

  பணிகளைப் பொறுத்தவரை உங்களுக்கு சாதகமான நாளாக இருக்காது. பணிச்சுமை அதிகமாகக் காணப்படும்.

  அது உங்களுக்கு கவலையை ஏற்படுத்தும். பணிகளை திட்டமிட்டு அதன்படி செயல்படுத்துங்கள். உங்கள் துணையுடன் ஈகோ சம்பந்தமான பிரச்சினைகள் எழலாம்.

  ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. தொண்டை சம்பந்தமான பிரச்சனைகளுக்கு வாய்ப்பு உள்ளது. முடிந்தவரை பதட்டத்தை தவிருங்கள். இதனால் உங்கள் ஆரோக்கியம் மேலும் பாதிக்கப்படும்.

  துலாம்:

  உங்கள் திட்டங்கள் மற்றும் அணுகுமுறை மூலம் வார துவக்க நாள் அற்புதமான நாளாக அமையும். உங்கள் உரையாடல் திறனை மேம்படுத்தி நன்மை பெறுவீர்கள்.

  திட்டமிட்ட செயல்களின் மூலம் நீங்கள் வெற்றி பெறலாம். ஆன்மீக ஈடுபாடு உங்களுக்கு அமைதியையும் மன நிறைவையும் பெற்றுத் தரும்.

  பணியிடத்தில் பணிகள் இறுக்கமாக காணப்படும். உங்களிடம் நிறைய எதிர்பார்ப்பார்கள். என்றாலும் சில கட்டுப்பாடுகள் காரணமாக நீங்கள் உங்கள் இலட்சியத்தை அடைய போராட வேண்டி இருக்கும்.

  உங்களால் செலவுகளை கட்டுபடுத்த இயலாது. எனவே சமாளிப்பதை கடினமாக உணர்வீர்கள். கடன் வாங்குவதற்கான சாத்தியம் உள்ளது.

  இல்லற வாழ்வை பொறுத்தவரை, உங்கள் துணை உங்கள் அன்பை சரியாக புரிந்து கொள்ள மாட்டார். நீங்கள் உங்கள் அன்பில் நேர்மையாக இருந்தாலும் அதனை உங்கள் துணை சரியாக புரிந்து கொள்ள மாட்டார்.

  வார இறுதியில் மன உளைச்சல் காரணமாக முதுகுவலிப் பிரச்சினைகள் ஏற்படும். உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

  விருச்சிகம்:

  வார துவக்கத்தில் நீங்கள் செய்யும் செயல்களில் கவனம் கண்டிப்பாக தேவைப்படும். ஆனாலும், வார இறுதியில் பல தடைகளுக்கு பிறகு வெற்றியைக் காண்பீர்கள். கவலைகளை நீக்கி மனதை அமைதியாக வைத்திருங்கள்.

  முறையாக பணியை மேற்கொள் நீங்கள் உயர் அதிகாரிகளை அனுசரித்து நடக்க வேண்டும். அது உங்களை வளர்ச்சிப் பாதைக்கு அருகில் அழைத்துச் செல்லும்.மேலும் சலுகைகளும் ஊக்கத்தொகையும்; கிடைக்க வாய்ப்பு உள்ளது. அது உங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும்.

  உங்களிடம் போதிய அளவு பணம் காணப்படும். பயனுள்ள வகையிலும் நல்ல செயலுக்காகவும் பணத்தை செலவு செய்வீர்கள். உங்கள் துணையிடம் சரியான நெறிமுறையை பின்பற்றுவீர்கள். அதன் காரணமாக அவரை நீங்கள் நன்றாக புரிந்து கொள்வீர்கள்.

  பதட்டம் காரணமாக முதுகு வலி ஏற்படலாம். பிரார்த்தனை மற்றும் உடற்பயிற்சி மேற்கொள்வது சிறந்தது.ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

  மே மாத முதல் வாரத்தின் ராசிபலன் – மேஷம் முதல் கடகம் வரை! இதை செய்யுங்கள் ரிலாக்‌ஸாக இருங்கள்!

  இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
  - Advertisment -

  Must Read

  காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

  சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....