Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாநாட்டுக்கு ஒரு நல்ல செய்தி : குறைந்து வரும் கொரோனா பாதிப்பு 

    நாட்டுக்கு ஒரு நல்ல செய்தி : குறைந்து வரும் கொரோனா பாதிப்பு 

    இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய பேரிடராக, நீங்கா நினைவில் இடம் பிடித்து விட்டது கொரோனா. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சீனாவில் தொடங்கிய இந்த வைரஸ், உலகின் அனைத்து நாடுகளையும் புரட்டி எடுத்து விட்டது என்று தான் சொல்ல வேண்டும். உலகமெங்கும் ஊரடங்கு, தனிமைப்படுத்துதல் போன்ற அவசர கால நடவடிக்கைகள் அத்தியாவசிய நடவடிக்கைகளாக ஆகிப்போகின. 

    முகக்கவசம் அணிவதும், சமூக இடைவெளியை கடை பிடிப்பதும் அன்றாட வாழ்க்கையின் அம்சங்களாக ஆகிப்போனது. அதனைத் தொடர்ந்து ஒன்று, இரண்டு மற்றும் மூன்று என பலவிதமான ஊரடங்குகள் வந்து சென்றாகி விட்டது. மார்ச் மாதம் தொடங்கிவிட்டாலே கொரோனா வைரஸின் தாக்கமும் கத்திரி வெயிலைப் போல மக்களை வதைக்க ஆரம்பித்து விடுகிறது. 

    இந்நிலையில், இந்த வருடமும் கொரோனா வைரஸின் நான்காவது அலை தொடர ஆரம்பித்து விட்டது. இந்தியாவிலும் கொரோனா தொடர்பான நடவடிக்கைகள் தளர்த்தப்பட்டு, சிலநாட்களிலேயே மீண்டும் அமலுக்கு கொண்டு வரப்பட்டது. 

    தொடர்ந்து அதிகரித்து வந்த கொரோனா பாதிப்புகள், தற்பொழுது குறைந்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்தியாவில் ஒரு நாளில் 3 ஆயிரத்து 157 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதன் மூலம் கொரோனா தொற்று பாதிப்புகள் குறைந்து வருவதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

    இதுகுறித்த விவரங்களை வெளியிட்ட மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம், நேற்று முன்தினம் 3 ஆயிரத்து 688 பேருக்கும், நேற்று 3 ஆயிரத்து 324 பேருக்கும் பாதிப்பு ஏற்பட்டதாக கூறி இருந்தது.

    இந்நிலையில் கடந்த 24 மணிநேரத்தில் 3 ஆயிரத்து 157 பேருக்கு மட்டுமே பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறி உள்ளது. இதன்மூலம் கொரானா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4 கோடியே 30 இலட்சத்து 82 ஆயிரத்து 345 ஆக உயரத்துள்ளதாகவும், தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளதாவும், இதனால் மொத்தமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 இலட்சத்து 23 ஆயிரத்து 869 ஆக உயிரிழந்துள்ளதாக அறிக்கை வெளியிட்டு உள்ளது. 

    கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 2 ஆயிரத்து 723 பேர் குணமடைந்துள்ளதாவும், அதன் மூலம் குணமடைந்தோரின் எண்ணிக்கை 4 கோடியே 25 இலட்சத்து 38 ஆயிரத்து 976ஆக உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. மீண்டும் கொரோனா பரவி வருவதால், அச்சத்தில் இருந்த மக்களுக்கு இது ஒரு ஆறுதல் செய்தியாக அமைந்துள்ளது.    

    “மக்கள் தடுப்பூசி போட்டு கொள்வது கட்டாயமில்லை”: உச்ச நீதிமன்றம் அதிரடி!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....