Monday, March 18, 2024
மேலும்
    Homeஜோதிடம்மே மாத முதல் வாரத்தின் ராசிபலன் - மேஷம் முதல் கடகம் வரை! இதை...

    மே மாத முதல் வாரத்தின் ராசிபலன் – மேஷம் முதல் கடகம் வரை! இதை செய்யுங்கள் ரிலாக்‌ஸாக இருங்கள்!

    மேஷம்:

    வாரத்தின் துவக்கத்தில் சில சரிவுகளை சந்திக்க நேர்ந்தாலும், மாதத்தின் முடிவில் இது மாறும். தேவை இல்லாத பதட்டம் மற்றும் படபடப்பை தவிருங்கள். உங்கள் உத்தியோகத்தைப் பொறுத்தவரை முன்னேற்றம் மந்த நிலையில் தான் இருக்கும்.

    குடும்பத்தில் அமைதியும் நல்லிணக்கமும் இருக்கும். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் சுமுக உறவு நீடிக்கும். உங்கள் முயற்சிகள் சிலவற்றில் பலன் காண தாமத நிலை நீடிக்கும்.

    ரிஷபம்:

    ரிஷப ராசிக்காரர்களேயே பொறுமையுடன் இருந்தால் வளர்ச்சியை காணலாம். பணம் சம்பந்தமான வளர்ச்சிகள் இந்த வாரம் உங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்காது. இன்று உங்கள் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஒரு சில சம்பவங்கள் நடைபெறலாம்.

    திருமணம் மற்றும் காதல் வாழ்வில் மகிழ்ச்சியாக இருப்பதற்கு உங்கள் வாழ்கை துணையுடன் சிறிது அனுசரித்து நடந்து கொள்ள வேண்டியது அவசியம். சிறிது மன அழுத்தம் இருந்தாலும் தேக ஆரோக்கியம் நன்றாக இருக்கும். நேர்மறை எண்ணத்துடன் இருங்கள்.

    மிதுனம்:

    வாரத்தின் துவக்கத்தில், வரவும் செலவும் சேர்ந்தே காணப்படும். பணத்தை கவனமாகக் கையாள மறக்காதீர்கள். இன்று பணியிட சூழ்நிலை சாதகமாக இருக்காது. வேலையின் போது கவனக்குறைவு ஏற்படுவதை தவிர்க்க பாருங்கள்.

    ஆனாலும், உங்கள் விருப்பங்களை நிறைவேற்ற முயற்சி செய்விர்கள். இன்று முழுவதும் நீங்கள் மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். இல்லற வாழ்க்கையை பொறுத்தவரை, உங்கள் துணையுடன் சிறு சில சண்டைகள் ஏற்படலாம். பொறுமையுடன் இருந்தால் சண்டைகள் வராமல் தவிர்க்கலாம்.

    ஆரோக்கியம் சுமாராக இருக்கும். பல்வலியால் அவதிகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. உணவில் கட்டுப்பாடு மேற்கொள்வது நல்லது.

    கடகம்:

    நிதி நிலைமை தாராளமாக இருக்கும். ஊக்கத் தொகையாகவோ அல்லது இதர சலுகைகளாகவோ இந்த வாரம் நீங்கள் பணத்தை பெறுவதற்கு வாய்ப்பு உள்ளது. குடும்பத்தில் அமைதியை பராமரிப்பீர்கள். நல்ல புரிந்துணர்வு உங்கள் துணையுடன் காணப்படும்.

    வேலையில் எடுக்கப்படும் முடிவுகள் உங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும். உங்கள் பணியை குறித்த நேரத்தில் முடிப்பீர்கள். ஆன்மீகத்தில் அதிக கவனம் செலுத்துவிர்கள். அதுவே உங்கள் செயல்களை சிறந்த முறையில் செய்யவும், உங்களை ரிலாக்ஸாக வைக்கவும் உதவும்.

    ஆரோக்கியம் நன்றாக இருக்கும். இந்த வாரத்தின் துவக்கத்தை நீங்கள் நல்ல முறையில் மகிழ்ச்சியுடன் கொண்டாடுவீர்கள்.

    மே மாத முதல் வாரத்தின் ராசிபலன் – சிம்மம் முதல் விருச்சிகம் வரை!

    மே மாத முதல் வாரத்தின் ராசிபலன் – தனுசு முதல் மீனம் வரை! கவனமா இருங்க கண்ணுங்களா!

    ஆன்மீகப் பார்வையில், அற்புதம் நிறைந்த சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோயில்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....