Wednesday, March 20, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்ஸ்டெம் செல் மாற்று அறுவை சிகிச்சை; எச்.ஐ.வி நோயிலிருந்து மீண்ட நபர்!

    ஸ்டெம் செல் மாற்று அறுவை சிகிச்சை; எச்.ஐ.வி நோயிலிருந்து மீண்ட நபர்!

    ஜெர்மனியைச் சேர்ந்த நபர் ஒருவருக்கு நடைபெற்ற ஸ்டெம் செல் மாற்று அறுவை சிகிச்சையில் அவருக்கு இருந்த எச்.ஐ.வி நோய் குணமாக்கப்பட்டுள்ளது. 

    ஜெர்மனியைச் சேர்ந்த 53 வயதான ஒரு நபருக்கு ஏய்ட்ஸ் மற்றும் இரத்தப் புற்றுநோய் இருந்துள்ளது. இதில் இரத்தப் புற்றுநோயை குணப்படுத்த அவருக்கு ஸ்டெம்செல் அறுவை சிகிச்சை செய்ய மருத்துவ குழுவால் முடிவெடுக்கப்பட்டது. 

    அதன்படியே, அவருக்கு ஸ்டெம்செல் மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது. இந்த சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட அவர் எச்.ஐ.வி நோயிலிருந்து குணமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு இருந்த இரத்தப் புற்றுநோயும் குணமானது. 

    இதையடுத்து, ஸ்டெம்செல் மாற்று அறுவை சிகிச்சை மூலம் எச்.ஐ.வி நோயிலிருந்து குணமடைந்த மூன்றாவது நபர் என்ற பெருமையை ஜெர்மனியைச் சேர்ந்த அந்த நபர் பெற்றார். 

    ஏற்கெனவே குணமடைந்த “லண்டன்” மற்றும் “பெர்லின்” நோயாளிகளுக்குப் போலவே, இந்த ஸ்டெம் செல் நன்கொடையாளருக்கும் எச்ஐவி-1 போன்ற சில எச்ஐவி விகாரங்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் ஒரு அரிய பிறழ்வு உள்ளது என்றும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    அதேநேரம், சில ஆராய்ச்சியாளர்கள் ஸ்டெம் செல் சிகிச்சையைப் பெற்ற மற்ற நோயாளிகளுக்கு இது வெற்றிகரமாக இல்லை என தெரிவித்துள்ளனர். 

    போர்த்துகீசிய மொழி பேசும் இந்திய கிராமம் – காரணம் என்ன?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....