Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாபோர்த்துகீசிய மொழி பேசும் இந்திய கிராமம் - காரணம் என்ன?

    போர்த்துகீசிய மொழி பேசும் இந்திய கிராமம் – காரணம் என்ன?

    இந்திய கிராமம் ஒன்று போர்த்துகீசிய மொழி கலந்த மராத்திய மொழியை வழக்கு மொழியாக இன்றளவும் பயன்படுத்தி வருகிறது. 

    மகாராஷ்டிரா மாநிலம், ராய்காட் மாவட்டத்தில் கோர்லாய் என்ற  கிராமம் உள்ளது. கோர்லாய் கிராமம் குண்டலிகா ஆற்றின் முகப்பில், ரெவ்தண்டாவில் அமைந்துள்ள ஒரு பெரிய போர்த்துகீசிய கோட்டையின் இடிபாடுகளுக்கு குறுக்கே அமைந்துள்ளது. 

    கோவாவிற்கும் டாமனுக்கும் இடையில் அமைந்துள்ள கோர்லாய் கிராமத்தில் கிறிஸ்தவர்கள் அதிகளவில் உள்ளனர். இந்த கிராமத்தில் உள்ளோரின் பேச்சு மொழி மற்ற இந்திய மொழிகளை விட சற்றே வித்தியாசமானதாக இருக்கும். 

    ஆம், கடந்த 400 ஆண்டுகளாக கோர்லாய் கிராமத்து மக்கள் தங்களின் பேச்சு மொழியாக போர்ச்சுகீசிய மொழி கலந்த மராத்திய மொழியை பயன்படுத்தி வருகின்றனர். அதாவது, நாம் ஆங்கிலம் கலந்த தமிழில் பேசுகிறோம் அல்லவா அப்படி. இந்த பேச்சு மொழியைத்தான் கோர்லாய் கிராமத்தைச் சுற்றியுள்ள 1,000 லுசோ-இந்திய கிறிஸ்தவர்களும் பயன்படுத்தி வருகின்றனர். இவர்கள் பேசும் மொழி நடையை கிரியோல் போர்த்துகீசியம், கோர்லாய் போர்த்துகீசியம் அல்லது நௌ-லிங் என்று அழைக்கின்றனர்.

    1594-ஆம் ஆண்டு வாக்கில் போர்த்துகீசியர்கள் முஸ்லீம்கள் கட்டுப்பாட்டில் இருந்த கோர்லாய் கோட்டையைக் கைப்பற்றினர். இதைத்தொடர்ந்து 1740 இல் போர்த்துகீசியர்கள் கோவாவிற்குச் செல்வதற்காக கோர்லாய் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளை கைவிட்டனர். இருப்பினும், 600-க்கும் மேற்பட்ட போர்த்துக்கீசிய ஆண்கள் இந்தியப் பெண்களை மணந்து அங்கேயே தங்கிவிட்டதாக கூறப்படுகிறது. இதனால்தான், கோர்லாய் கிராமத்து மக்கள் நௌ-லிங் மொழியை பேசுகிறார்கள் என்று கூறப்படுகிறது. 

    அதேநேரம், கோர்லாய் கிராமத்தில் மராட்டிய மொழி ஆட்சி மற்றும் வணிக மொழியாக விளங்கி வருவது குறிப்பிடத்தக்கது. 

    தீ மிதிக்கும்போது ஏன் பாதங்களில் காயம் ஏற்படுவதில்லை? – காரணம் தெரியுமா?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....