Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்தில்லி மேயர் தேர்தல்; மோதலில் ஈடுபட்ட பெண் கவுன்சிலர்கள்!

    தில்லி மேயர் தேர்தல்; மோதலில் ஈடுபட்ட பெண் கவுன்சிலர்கள்!

    தில்லி மேயர் தேர்தலில் நேற்று இரவு பெண் கவுன்சிலர்கள் இடையே ஏற்பட்ட மோதலால் பரபரப்பு ஏற்பட்டது. 

    தில்லி மாமன்றக் கூட்டம் இரவு முழுவதும் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், இன்று காலை 13-வது முறையாக ஒத்திவைக்கப்பட்டது. 

    ஆம் ஆத்மி மற்றும் பாஜக கவுன்சிலர்கள் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக தில்லி மேயர் தேர்தல் மூன்று முறை ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து உச்சநீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து நேற்று தில்லி மேயர் தேர்தல் நடைபெற்றது. 

    நேற்று காலை 11.30 மணி அளவில் தொடங்கிய மேயர் தேர்தல், மேயர், துணை மேயரை தேர்ந்தெடுக்கும் வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடைபெற்றது. மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளர் ஷெல்லி ஓபராய் 34 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாகை சூடினார். அதே சமயம், துணை மேயருக்கான தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளர், ஆலே முகம்மது இஃபால் 31 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். 

    இதையடுத்து, 6 நிலைக்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கும் நடைமுறைகள் தொடங்கியபோது அமளி ஏற்பட்டது. அப்போது வாக்களிக்க கைப்பேசியை எடுத்துவருவதற்கு உறுப்பினர்களை அனுமதிக்க ஷெல்லி ஓபராய் முடிவு செய்ததற்கு பாஜக கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். 

    இதைத்தொடர்ந்து, தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக பாஜக கவுன்சிலர்கள் முழக்கம் எழுப்பினர். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. மேலும் இரு கட்சிகளை சேர்ந்த பெண் கவுன்சிலர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். மேலும் அங்கிருந்த இருக்கைகள், வாக்குபெட்டிகள் உடைக்கப்பட்டன. 

    கவுன்சிலர்களின் அமளி காரணமாக தில்லி மாநகராட்சி தேர்தல் கூட்டம் நேற்று இரவு முழுவதும் 13 முறை ஒத்திவைக்கப்பட்ட நிலையில், இன்று காலை மீண்டும் 13-வது முறையாக ஒத்திவைக்கப்பட்டது.

    விஷாலின் ‘மார்க் ஆண்டனி’ படப்பிடிப்பில் விபத்து.. வெளியான வீடியோவால் ரசிகர்கள் அதிர்ச்சி!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....