Saturday, March 23, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடர்பான வழக்கு; அதிரடி தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம்

    அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடர்பான வழக்கு; அதிரடி தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம்

    அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லும் என உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு அளித்துள்ளது. 

    எடப்பாடி பழனிசாமி தலைமையில் கடந்த ஆண்டு ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டம் செல்லும் என சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து, ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் பல மேல்முறையீட்டு மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. 

    இதைத்தொடர்ந்து, உச்சநீதிமன்ற நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி மற்றும் ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அமர்வு முன்பு மேல்முறையீட்டு மனுக்கள் விசாரணைக்கு வந்தன. மேலும் இரு தரப்பினரும் எழுத்துப்பூர்வ விளக்கங்களையும் தாக்கல் செய்தனர். இதையடுத்து, அனைத்து தரப்பு வாதங்களையும் விசாரித்த நீதிமன்றம் தீர்ப்பை தள்ளிவைத்தது. 

    இந்நிலையில், இன்று அதற்காக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லும் எனவும், கட்சியின் இடைகாலப் பொதுச் செயலாளராக எடப்பாடி கே.பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 

    மேலும், இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் உறுதி செய்வதாகவும், ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்தும் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர். 

    இதனிடையே, உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை தொடர்ந்து, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகத்திற்கு வெளியே தொண்டர்கள் குவிந்து இருப்பதால் பலத்த காவல் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. 

    ஸ்டெம் செல் மாற்று அறுவை சிகிச்சை; எச்.ஐ.வி நோயிலிருந்து மீண்ட நபர்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....