Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்லாட்டரி அடித்த பணத்தில் முன்னாள் மனைவிக்கு வீடு; கடுப்பான இரண்டாம் மனைவி செய்த செயல்!

    லாட்டரி அடித்த பணத்தில் முன்னாள் மனைவிக்கு வீடு; கடுப்பான இரண்டாம் மனைவி செய்த செயல்!

    லாட்டரி டிக்கெட்டில் வெற்றிப் பெற்ற பணத்தை முன்னாள் மனைவிக்கு கொடுத்ததால் இரண்டாம் மனைவியுடன் சீனாவில் ஒருவருக்கு விவாகரத்து ஆகியுள்ளது. 

    இந்தியாவில் பெரும்பான்மையான இடங்களில் லாட்டரி டிக்கெட்டுகள் தடை செய்யப்பட்டு விட்டாலும், உலகளவில் பல நாடுகளில் லாட்டரி டிக்கெட்டுகள் இன்னும் நடைமுறையில் உள்ளன. 

    இந்த லாட்டரிகளால் பல சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், சீனாவில் ஒரு லாட்டரியால் விவகாரத்து நடைபெற்றுள்ள சம்பவம் இணையத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. 

    சீனாவில், ஸோ என்ற நபர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு லாட்டரியில் 10 மில்லியன் யுவானை வென்றுள்ளார் (12.13 கோடி ரூபாய்). இதில் வரிகளெல்லாம் போக ஸோ கைவசம் வந்தது 8.43 மில்லியன் யுவான் (10.22 கோடி ரூபாய்). 

    இந்த லாட்டரி வெற்றி குறித்து ஸோ தனது மனைவி லின்னிடம் மறைத்துள்ளார். வெற்றிப்பெற்ற பணத்தில் இருந்து ரூ.2.42 கோடியை தனது மூத்த சகோதரிக்கு அனுப்பியிருக்கிறார். இதையடுத்து, ரூ.84.93 லட்சத்தை தனது முன்னாள் மனைவிக்கு ஸோ அளித்துள்ளார். இப்பணத்தை அவர் வீடு வாங்குவதற்காக ஸோ அளித்துள்ளதாக கூறப்படுகிறது. 

    இந்தச் செய்தி ஸோ-வின் மனைவி லின்னுக்கு எப்படியோ தெரிந்துவிட்டது. இதனால் வெறுப்படைந்து மனமுடைந்த லின், விவாகரத்துக்கு விண்ணப்பித்ததோடு, ஸொவுக்கும் தனக்குமான சொத்தில் சரிப்பங்கை பிரித்து கொடுக்கும்படியும் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். 

    மேலும், தன்னிடமிருந்து மறைத்து அவரது சகோதரிக்கும், முன்னாள் மனைவிக்கும் கொடுத்த 2.7 மில்லியன் யுவானில் இருந்து மூன்றில் ஒரு பங்கையும் ஸோவிடம் இருந்து வாங்கித் தருமாறு கேட்டிருக்கிறார்.

    இச்சம்பவம் தொடர்பான வழக்கின் விசாரணை இரண்டு ஆண்டுகளாக நடந்து வந்த நிலையில், தற்போது இந்த வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இருவருக்கும் பொதுவான சொத்தை ஸோ அபகரித்ததால், மறைத்து வைத்த பணத்தில் இருந்து 60 சதவிகித ஷேரை லின்னிற்கு கொடுக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

    உண்மையில் காதலர் தினம் காதலர்களுக்கானதுதானா? – இன்றைய ஸ்பெஷல்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....