Sunday, March 17, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்வசூலில் பிகிலை முந்தியதா வாரிசு? - வெளியான தகவல்!

    வசூலில் பிகிலை முந்தியதா வாரிசு? – வெளியான தகவல்!

    நடிகர் விஜய்யின் பிகில் திரைப்படம் ரூ.305 கோடி வசூல் சாதனை படைத்திருந்த நிலையில், வாரிசு பிகில் படத்தின் வசூலை முறியடித்துள்ளது. 

    இயக்குநர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து கடந்த ஜனவரி 11-ஆம் தேதி வெளிவந்த திரைப்படம்தான், வாரிசு. தில் ராஜூ தயாரித்திருந்த இத்திரைப்படத்திற்கு தமன் இசையமைத்திருந்தார். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான வாரிசு கலவையான விமர்சனங்களையே சந்தித்தது.

    இருப்பினும், வாரிசு திரைப்படத்தின் வசூல் துளியும் பாதிக்கப்படவில்லை என்று சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சமீபத்தில் வாரிசு திரைப்படம் ரூ.300 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழுவினரால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

    வாரிசு திரைப்படத்துடன் வெளிவந்த துணிவு திரைப்படம் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் ரிலீஸாகியுள்ள நிலையில், வாரிசு இன்னமும் திரையரங்குகளில் அதிக காட்சிகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. 

    இந்நிலையில், வாரிசு திரைப்படம் ரூ.310 கோடி வசூல் புரிந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. முன்னதாக, நடிகர் விஜய்யின் பிகில் திரைப்படம் ரூ.305 கோடி வசூல் சாதனை படைத்திருந்த நிலையில், வாரிசு பிகில் படத்தின் வசூலை முறியடித்துள்ளது. 

    இத்தகவலை விஜய் ரசிகர்கள் சமூகவலைதளத்தில் டிரெண்டாக்கி வருகின்றனர். மேலும், விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் லியோ படம் வாரிசு படத்தின் வசூல் சாதனையை முறியடிக்கும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர். 

    காதலர் தின ஸ்பெஷல் எங்கே? – ரசிகர்களை ஏமாற்றிய அனிருத், விக்னேஷ் சிவன்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....