Sunday, March 17, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குஇயலும் இசையும்காதலர் தின ஸ்பெஷல் எங்கே? - ரசிகர்களை ஏமாற்றிய அனிருத், விக்னேஷ் சிவன்!

    காதலர் தின ஸ்பெஷல் எங்கே? – ரசிகர்களை ஏமாற்றிய அனிருத், விக்னேஷ் சிவன்!

    இசையமைப்பாளர் அனிருத் மற்றும் விக்னேஷ் சிவன் காம்போவில் கடந்த சில ஆண்டுகளாக காதலர் தினத்தை முன்னிட்டு ஒரு பாடல் வெளியாவது வழக்கமாக இருந்தது. காதலர் தினத்தை முன்னிட்டு அவர்கள் வெளியிடும் பாடல்கள் இளைஞர்களிடத்தில் பெரிய வரவேற்பை பெற்றது. 

    அப்பாடல்களில் அனிருத் இசையில் விக்னேஷ் சிவனின் வரிகள் தற்காலத்து காதலை வெவ்வேறு சூழலில் இருந்து வெளிப்படுத்துவதாக இருந்தன. ‘எனக்கென யாரும் இல்லையே’ என 2015-ல் ஆரம்பித்த காதலர் தின ஸ்பெஷல் பாடல்கள் 2021-ஆம் ஆண்டு ‘ரெண்டு காதல்’ என நீட்சிக்கு உள்ளாகியிருந்தது. 

    இதற்கிடையில்,  ‘அவளுக்கென’, ‘ஒன்னுமே ஆகல’, ‘ஜூலி’, ‘மறக்கவில்லையே’ போன்ற பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் அதிக வரவேற்பை பெற்றன. இப்பாடல்கள் இன்றளவும் இளைஞர்களால் அதிகம் விரும்பி கேட்கப்படும் பாடல்களில் ஒன்றாக உள்ளது. 

    இயல்பாகவே, அனிருத் – விக்னேஷ் சிவன் காம்போக்களில் வெளியாகும் பாடல்களுக்கு தனி ரசிக பட்டாளம் உள்ளது. இருப்பினும், காதலர் தின சிறப்பாக இவர்கள் இருவரின் காம்போக்களில் வெளியாகும் பாடல்களுக்கு இன்னும் அதிகளவில் ரசிக கூட்டம் உள்ளது. 

    ‘காதலிக்காக மனம் ஏங்குகிறது’ என்பதன் அடிப்படையிலேயே பெரும்பாலான பாடல்கள் உள்ளது. ‘எனக்கென யாரும் இல்லையே’ பாடலில் ‘பாதி காதல் தந்தே பெண்ணே மீதியும் வேண்டும்’ என்ற வரியில் பிரேக் அப் நடந்தேறியதற்கான சுவடுகள் ஆழமாகவும், இருப்பினும் உன் காதல் வேண்டும் என்ற ஏக்கம் வெளிப்படையாகவும் உழல்வதை நாம் காணலாம். 

    ‘அவளுக்கென’ பாடலில் இசையாகவும், வரிகளாகவும், காட்சிகளாகவும் காதல் கையாளப்பட்டிருக்கும் விதம் உச்சம் என்றால் அது மிகையல்ல. முழுக்க முழுக்க காதல் தினத்தை அடிப்படையாக கொண்ட இப்பாடலில், ‘அவளோ இங்கு இல்லை..நானோ அங்கு இல்லை இருப்பினும் ஏதோ ஒன்று ஆகுதே’  என்ற வரிகளில் கொப்பளிக்கும் காதலை, ஏக்கத்தை காதலி/ காதலன் இருப்பைத் தவிர வேறென்ன போக்கும். 

    ‘ஒன்னுமே ஆகல’ – இது அந்த காலம் போல இல்லை. இப்பொதெல்லாம் காதலும், காதல் பிரிந்தால் ஏற்படும் வலியும் மாறிவிட்டது என்ற பேச்சை தற்போதைய காலக்கட்டத்தில் நாம் அதிகம் கேட்டிருப்போம். இந்தச் சூழலை அடிப்படையாக கொண்டுதான் ‘ஒன்னுமே ஆகல’ பாடல் உருவாகியுள்ளது. ‘எல்லாம் மாறிவிட்டது’ என்பதை சில சதவீதம் ஏற்றுக்கொண்டால், காதலும், அதன் வலியும் மாறவில்லை என்பதுதான் நிதர்சனம். வெளிப்படுத்தும் தோரணைகள்தான் தற்போது மாறியுள்ளது. 

    ‘என் கண்ணு கலங்கல..என் நெஞ்சு வலிக்கல.. காதல் கவுந்துதான் போனதால’ என்று ஆரம்பிக்கும் பாடல் ‘கண்ணு கலங்குது..நெஞ்சு வலிக்குது.. காதல் நவுந்துதான் போனதால’ என்று மாறுவது காதல் வாழ்வின் எதார்த்தமே. 

    ‘ஜூலி’ – அனிருத் விக்னேஷ் சிவன் காம்போக்களில் வெளிவந்த வேலண்டைன் ஸ்பெஷல் பாடல்களில் சற்றே வித்தியாசமானது ஜூலி. அன்பின் நிமித்தமான நாயோடு இருக்கும் உறவை இந்த ஜூலி பாடல் வெளிப்படுத்தியது. ரொம்பவே க்யூட் ஆன பாடலாக இப்பாடல் இளைஞர்களின் பட்டியலில் சேர்ந்துள்ளது. ‘உன் கலைஞ்சு போன முடிய நான் கோத..எந்த சரக்கும் தந்திடாதே அந்த போத..’ என்ற வரியில் இருக்கும் உணர்வு நாய் வளர்க்கும் பலருக்கும் தெரிந்திருக்கும். 

    ‘மறக்கவில்லையே’ – நானி நடித்த ஜெர்ஸி படத்தில் இடம்பெற்ற பாடல்தான் இது. தெலுங்கு படமாக இருந்தாலும், மறக்கவில்லையே பாடலை தமிழில் உருவாக்கம் செய்தது அனிருத்-விக்னேஷ் சிவன் காம்போ. இளைஞர்களை அதிகளவில் கவர்ந்த பாடல் என்றே இப்பாடலை சொல்லலாம். காதலி பிரிந்ததும், அவள் சார்ந்த நினைவுகளை கொண்டு எழும்பும் இப்பாடல் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. ‘ஊர் தூங்கும் நேரம், தினந்தோறும் அந்த மொட்டை மாடி சந்திப்பெல்லாம் வேண்டும், நடக்காதா மீண்டும்?’ என்ற வரியில் நிகழ்ந்தவை எல்லாம் மனதிற்குள் கனமாக உழல்வதை நம்மால் உணரமுடிகிறது. 

    ‘ரெண்டு காதல்’ – காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் இடம்பெற்ற இப்பாடல், காதலர் தின வெளியிடாகவே முதலில் ரிலீஸானது. ‘இவன் பிரிய போகிறான் என்று ஒருமுறை கூட நினைக்கவில்லை. இது உடைய கூடிடும் என்று ஒரு முறை கூட உறைக்கவில்லை.’ போன்ற பிரிவை உணர்த்தும் ஆழமான வரிகள் எளிய முறையில் இப்பாடலில் இடம்பெற்றிருக்கும். இது இப்பாடலின் பெரிய பலமாகவே பார்க்கப்பட்டது. 

    இப்படியாக ரசிகர்களை கவர்ந்த அனிருத்-விக்னேஷ் சிவன் காம்போவில் இந்த ஆண்டு காதலர் தின ஸ்பெஷலாக எந்தப்பாடலும் வெளியாகாதது, அவர்களது ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது. குறைந்தது, இவர்களின் காம்போக்களில் பாடல்கள் வெளியாகாதபோது, அனிருத் இசையில் உருவான பாடல்களாவது (குட்டி ஸ்டோரி-2020, அரபிக்குத்து -2022) வெளிவரும். இம்முறை அதுவும் இல்லை என்பதால் ரசிகர்கள் பெரும் ஏமாற்றத்திற்கு உள்ளாகியுள்ளனர். 

    நயன்தாராவிற்கான விக்னேஷ் சிவனின் பிரத்யேக பாடல்!

    வரிகளில் வைரமுத்து வெடிக்க…இசையில் ஏ.ஆர்.ரஹ்மான் சீற பலரும் அறியா ஒரு காதல் கீதம் இது!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....