Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாவாட்ஸ்-அப் மூலம் பிரசவம்; காஷ்மீரில் நடைபெற்ற நெகிழ்ச்சி சம்பவம்!

    வாட்ஸ்-அப் மூலம் பிரசவம்; காஷ்மீரில் நடைபெற்ற நெகிழ்ச்சி சம்பவம்!

    பிரசவ வலியில் துடித்த பெண்ணுக்கு வாட்ஸ் அப் கால் வழியாக மருத்துவர்கள் சிகிச்சை அளித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

    ஜம்மு-காஷ்மீரில் தற்போது பனிப்பொழிவு அதிகமாக இருப்பதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. அவசர தேவைக்கு கூட வீட்டை விட்டு வெளியே வர முடியாத சூழ்நிலை இருந்து வருகிறது. 

    இந்நிலையில், கடந்த பிப்ரவரி 10 ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் கெரன் பகுதியில் இருக்கும் அரசு சுகாதார மையத்திற்கு பிரசவ வலியோடு பெண் ஒருவர் வந்தார். அப்போது அங்கு மருத்துவம் பார்ப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட வேண்டிய சூழ்நிலை இருந்தது. இருப்பினும் கடும் பனிப்பொழிவு காரணமாக விமானம் இயக்கப்படவில்லை. 

    அப்போது அப்பெண்ணுக்கு உடனடியாக பிரசவம் பார்த்தே ஆக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதால், ஜம்மு-காஷ்மீரின் துணை மாவட்டமான க்ரால்போராவைச் சேர்ந்த மகப்பேறு மருத்துவர்கள் உதவியுடன் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் வாட்ஸ் அப் மூலமாக தொடர்புகொண்டு அப்பெண்ணுக்கு சிகிச்சை அளித்தனர். 

    தொடர்ந்து 6 மணிநேர தீவிர சிகிச்சைக்கு பிறகு அப்பெண்ணுக்கு ஆரோக்கியமான பெண் குழந்தை பிறந்துள்ளது. தற்போது தாயும் சேயும் நலமுடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    வசூலில் பிகிலை முந்தியதா வாரிசு? – வெளியான தகவல்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....