Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்மக்கள்தொகையை பெருக்க சீன அரசின் புதிய திட்டம்

    மக்கள்தொகையை பெருக்க சீன அரசின் புதிய திட்டம்

    மக்கள் தொகையை பெருக்க சீன அரசு புதிய முயற்சிகளை கையில் எடுத்துள்ளது. 

    சீனா உலகில் அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக இருந்து வருகிறது. இதற்கு அடுத்து இரண்டாவது இடத்தில் இந்தியா இருந்து வருகிறது. இதனிடையே வரலாறு காணாத வகையில் சீனாவில் மக்கள் தொகை குறைந்துள்ளது.

    அதாவது, 2021 முதல் 2022 ஆம் ஆண்டில் சீனாவின் மொத்த மக்கள் தொகையான 140 கோடியில் 8,50,000 என்ற விதத்தில் மக்கள் தொகையானது குறைந்துள்ளது. இது மிகப்பெரிய வீழ்ச்சியாக பாரக்கப்படுகிறது. இருப்பினும் இது இந்தியாவுடன் ஒப்பிடுகையில் குறைவாக இருப்பதாக சீனாவின் தேசிய புள்ளியியல் பணியகம் அதிகாரப்பூர்வமாக அறிக்கை வெளியிட்டுள்ளது. 

    முதல் இடத்தில் இருக்கும் சீனாவை முந்தும் நிலையில் இந்தியா இருந்து வருவதால், அந்நாட்டு மக்கள்தொகையை பெருக்க அந்நாட்டு அரசு தம்பதிகளுக்கு கூடுதல் குழந்தைகளை பெற்றுக்கொள்ளும்படி அறிவுறுத்தல்கள் வெளியாகியுள்ளன. அதில் குறிப்பாக முதலில் ஒரு தம்பதி ஒன்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளை பெற்றுக்கொள்ள அனுமதி உண்டு என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    இந்நிலையில், சீனாவில் முதியவர்களின் எண்ணிக்கை கூடியதால் நாட்டின் வளர்ச்சி மற்றும் பொருளாதாரம் உள்ளிட்டவற்றை கணக்கில் கொண்ட சீன அரசு குழந்தை பெற்றுக்கொள்வதில் சில தளர்வுகளை அறிவித்து வருகிறது. 

    அந்த வகையில் திருமணம் செய்துகொள்ள விரும்பாத இளைஞர்கள் தங்களது விந்தணுக்களை தானம் செய்ய வேண்டும் என சீனாவின் விந்தணு வங்கிகள் கேட்டுக் கொண்டுள்ளன. நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கும் கல்லூரி மாணவர்கள் விந்தணுக்களை தானம் செய்யக்கோரி சீனாவின் வீபோ என்ற விந்தணு வங்கி பதிவிட்டதைத் தொடர்ந்து இந்த விவகாரம் பேசுபொருளாகியுள்ளது. 

    இவ்வாறு பெறப்படும் விந்தணுக்களை கொண்டு குழந்தைப்பேறு அடைய முடியாத தம்பதிக்கு செலுத்தி சீனாவின் மக்கள் தொகையை பெருக்குவதற்கான திட்டத்திற்கு உதவும் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

    வாட்ஸ்-அப் மூலம் பிரசவம்; காஷ்மீரில் நடைபெற்ற நெகிழ்ச்சி சம்பவம்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....