Sunday, March 17, 2024
மேலும்
    Homeசிறப்பு கட்டுரைஉண்மையில் காதலர் தினம் காதலர்களுக்கானதுதானா? - இன்றைய ஸ்பெஷல்!

    உண்மையில் காதலர் தினம் காதலர்களுக்கானதுதானா? – இன்றைய ஸ்பெஷல்!

    காதலர் தினம் கொண்டாடப்படுவதற்கு பொதுவாக நாடுகள் சார்ந்து பல்வேறு காரணங்கள் கூறப்பட்டு வருகின்றன. அதேநேரம் பரவலாக கூறப்படும் காரணம் ஒன்றும் இருக்கிறது. அதன்படி பார்க்கையில் ஒரு தண்டனையில் இருந்த பூத்த விடுதலையே இந்த காதலர் தினம். 

    கி.பி 3 ம் நூற்றாண்டைச் சேர்ந்த ரோமானிய அரசரான இரண்டாம் கிளாடியுஸ், சர்வாதிகார ஆட்சி புரிந்து வந்துள்ளார். அப்போது, மக்களுக்கு எதிரான அவரின் கொடுங்கோல் ஆட்சியைப் பொறுத்துக் கொள்ள முடியாத அவரது படையிலிருந்த பல பாதுகாப்பு வீரர்கள் அவரது படையை விட்டு விலகினர். 

    படை பலம் குறைவதை அறிந்த  கிளாடியுஸ், படை பலத்தை அதிகரிக்க பல திட்டங்களை வகுக்கிறார். புதிய வீரர்களை பணியில் சேர்க்க உத்தரவும் பிறப்பிக்கிறார். ஆனாலும், வீரர்கள் படைக்கு வரவில்லை. இதைத்தொடர்ந்து, தீவிர ஆலோசனையில் இரண்டாம் கிளாடியுஸ் களமிறங்கினார்.

    அவரின் யோசனையில், திருமணம் மற்றும் காதல் உறவு காரணமாகவே ஆண்கள் யாரும், பாதுகாப்புப் பணிக்கு வருவதில்லை என நினைத்து,  நாட்டில் உள்ள ஆண்கள் யாரும் காதலிக்கவே கூடாது, அப்படிக் காதலித்தாலும் திருமணம் செய்யக் கூடாது என உத்தரவு பிறப்பிக்கிறார். கூடவே, ஏற்கனவே திருமணம் நிச்சயக்கப்பட்டவர்களும் திருமணம் செய்யக் கூடாது எனவும், அப்படி மீறி திருமணம் செய்வோருக்குக் கொடூரமான முறையில், பொதுவெளியில் மரண தண்டனை வழங்கப்படும் என அறிவிக்கிறார்.

    இதனால், மக்கள் கடும் அச்சத்திற்கு உள்ளாகினர். அந்த நேரத்தில் வேலண்டைன் என்பவர் அரசரின் சட்டத்தை எதிர்த்து, அங்குள்ள ஆண்களுக்கு திருமணம் செய்து வைக்கிறார். இச்செய்தி, அரசர் கிளாடியுஸுக்கு தெரிய வருகிறது. இதனால், வேலண்டைனை கைது செய்து இருட்டான சிறையில் அடைக்க உத்தரவிடுவதோடு, அவருக்கு பொதுவெளியில் மரண தண்டனை விதிக்கவும் அதிகாரிகளுக்கு கட்டளையிடுகிறார். 

    இதைத்தொடர்ந்து, வேலண்டைன் சிறையில் அடைக்கப்படுகிறார். அவர் சிறையில் இருந்த காலக்கட்டத்தில் சிறையின் தலைமைக் காவலரின் கண் தெரியாத மகளான அஸ்தூரியஸ் மீது வேலண்டைனுக்கு காதல் வேர்விடுகிறது.

    வேலண்டைனின் காதலை அஸ்தூரியஸூம் ஏற்கிறார். இருவருக்கும் இடையேயான காதல் மரமென எளிதில் வளர்கிறது. தனது காதலரான வேலண்டைனை, சிறையிலிருந்து தப்பிக்க வைக்க அஸ்தூரியஸ் திட்டம் தீட்டுகிறார். அஸ்தூரியஸின் திட்டம் எப்படியோ அரசருக்கு தெரிந்து விடுகிறது. 

    இதையடுத்து, பிப்ரவரி 14ஆம் தேதி வேலண்டைனுக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது. வேலண்டைனின் மரணம் பெரும் தாக்கத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்துகிறது. நாளடைவில், ரோம், யூரோப் கட்டுப்பாட்டிற்கு வந்த பிறகு போப் ஆண்டவர் ஒருவரால் வேலண்டைன் புனிதராக அறிவிக்கப்பட்டார். அதைத்தொடர்ந்து, அவரின் இறந்தநாள் காதலர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சமீபகாலமாக காதலர்கள் தினம் அனைத்து உறவுகளுக்குமானது என்று பேசப்பட்டும், கொண்டாடப்பட்டும் வருகின்றன. ஆனால், வேலண்டைன் வாழ்வை நினைவில் கொண்டு பார்க்கையில் காதலர்கள் தினம் காதலர்களுக்கும், தம்பதியினர்களுக்கு மட்டுமே உரித்தானது. 

    தற்போதைய காலக்கட்டத்தில் முடிந்தவரையில், ஒவ்வொரு உறவுகளுக்கும் பிரத்யேக தினங்கள் உள்ளது. பெரும்பாலும் அந்த தினங்களில் அந்த தினம் யாருக்கானதோ அவர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படும். அவ்வாறேதான் காதலர் தினமும். என்னதான் முக்கியத்துவம் காதலர் தினத்திற்கு கொடுக்கப்பட்டாலும், சமீப காலமாக காதலர் தினத்தை ஏனைய உறவுகளுக்கும் மடைமாற்றும் செயலானது தெரிந்தோ, தெரியாமலோ அரங்கேறி வருகிறது. முடிந்தவரையில் அதை நாம் களைவோமாக. காதல் எனும் உணர்வை பேணுவோமாக. 

    பூச்செண்டாய் மனித மனங்கள் நிறைய காதல் அவசியம்தானே?! – காதலர் தின ஸ்பெஷல்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....