Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்தலைமைத்திறன் பயிற்சி முகாம்: புதுச்சேரி கூட்டுறவுத்துறை ஏற்பாடு

    தலைமைத்திறன் பயிற்சி முகாம்: புதுச்சேரி கூட்டுறவுத்துறை ஏற்பாடு

    புதுச்சேரி அரசு கூட்டுறவுத்துறை மற்றும் இந்திய தேசியக் கூட்டுறவு ஒன்றியம் சார்பில் கூட்டுறவு வார விழாவையொட்டி நடைபெற்ற ஒருநர் பயிற்சி முகாமில் பல்வேறு கூட்டுறவு சங்கங்களை சேர்ந்த தலைவர்கள் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    புதுச்சேரி அரசு கூட்டுறவுத்துறை மற்றும் இந்திய தேசியக் கூட்டுறவு ஒன்றியம், புதுதில்லி வழிகாட்டுதலின்படி ஒவ்வொரு ஆண்டும் கூட்டுறவு வார விழாவானது நவம்பர் 14-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை கொண்டாடப்பட்டு வருகின்றது.

    அந்த வகையில் இந்த ஆண்டு இந்தியா 75 ,கூட்டுறவுகளின் வளர்ச்சியும் அவற்றின் எதிர்காலமும் என்ற தலைப்பில் புதுச்சேரியில் கூட்டுறவு வார விழா சிறப்பாக கொண்டாட திட்டமிடப்பட்டுள்ளது. அதன் ஒரு  பகுதியாக கூட்டுறவுச்சங்கங்களின் நிர்வாகக் குழு உறுப்பினர்களுக்கு ஒரு நாள் தலைமைத்திறன் பயிற்சி முகாம் புதுச்சேரி மாநில கூட்டுறவு ஒன்றிய கருத்தரங்க வளாகத்தில் நடைபெற்றது.

    கூட்டுறவு கல்வி தொழில்முறை மேலாண்மை மற்றும் புத்தாக்கப் பயிற்சியை முக்கிய பொருண்மையாகக் கொண்டுவருதல் என்ற தலைப்பில் நடைபெற்ற பயிற்சி முகாமிற்கு கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் யஷ்வந்த் அய்யா தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

    துணைப்பதிவாளர் சாரங்கபாணி வாழ்த்துறை வழங்கினார். ஒன்றியத்தின் மேலாண்மை இயக்குநர் கருணாகரன் வரவேற்புரையாற்றினார். கூட்டுறவுத்துறை துணைப்பதிவாளர் சீனுவாச ஆச்சாரயலு, கூட்டுறவுத்துறை அதிகாரிகள் மற்றும் இப்பயிற்சியில் பல்வேறு கூட்டுறவு சங்கங்களை சேர்ந்த தலைவர்கள் மற்றும் நிர்வாகக்குழு இயக்கனர்கள் 60 பேர் கலந்து கொண்டனர்.

    இவர்களுக்கு திண்டுக்கல் காந்திகிராம் கிராம நிகர்நிலைப்பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் ரவிச்சந்திரன் பயிற்சி அளித்தார். இறுதியாக முதுநிலை பேராசிரியர் ரங்கநாதன் நன்றியுரை ஆற்றினார்.

    இதையும் படிங்கமழை வெள்ளத்தால் ஏற்படும் உயிர் சேதங்களுக்கு நிவாரணம் அறிவிப்பு: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....