Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாரயில் தண்டவாளத்தில் குண்டு வெடிப்பு! தீவிரவாதிகளின் சதியா? என என்.ஐ.ஏ தீவிர விசாரணை

    ரயில் தண்டவாளத்தில் குண்டு வெடிப்பு! தீவிரவாதிகளின் சதியா? என என்.ஐ.ஏ தீவிர விசாரணை

    ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் அருகே விரைவு ரயிலை வெடிகுண்டு வித்து தகர்க்க முயற்சி செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

    கடந்த அக்டோபர் மாதம் 31 ஆம் தேதி பிரதமர் மோடி, குஜராத் மாநிலம் அசர்வா முதல் ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் வரை செல்லும் விரைவு ரயில் சேவையை தொடங்கி வைத்தார். 

    இதனிடையே அசர்வா நகரில் இருந்து உதய்பூர் செல்லும் வழியில் கேவ்டா கி நல் என்ற பகுதியில் நேற்று ரயில் தண்டவாளத்தில் திடீரென வெடிக்குண்டு வெடித்தது. 

    இதுகுறித்து தகவல் அளிக்கப்பட்ட நிலையில், காவல்துறையினர் அங்கு வந்து விசாரணை நடத்தினர். அந்தத் தண்டவாளம், சுரங்கங்களில் பயன்படுத்தப்படும் வெடிகுண்டு வைத்து தகர்க்கப்பட்டதும் கண்டுபிடிப்பிக்கப்பட்டது. இந்த பாலதின் அருகில் ஜாவர் சுரங்கமும் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும். 

    இதையடுத்து, பாலத்தை சரி செய்யும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டன.  இதன்காரணமாக அந்த வழியே செல்ல இருந்த ரயில், துங்கப்பூர் என்ற பகுதியில் நிறுத்தப்பட்டது. இந்த வெடிகுண்டு வெடிப்பதற்கு நான்கு மணி நேரம் முன்பாக, அந்த தண்டாவாளத்தில் விரைவு ரயில் சென்றுள்ளது.

    இதுகுறித்து காவல்துறையினர் தரப்பில், கல் குவாரியில் பயன்படுத்தப்படும் வெடி பொருட்கள், தண்டவாளத்தை சேதப்படுத்துவதற்காக வைக்கப்பட்டுள்ளன. இந்தச் சதி செயலுக்கு காரணமாணவர்கள் யார் என்பதை தேடி வருகிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தச் சம்பவம் குறித்து தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணையை தொடங்கியுள்ளது.

    இந்தச் சம்பவம் தொடர்பாக ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், “சம்பவம் நடந்த இடத்தில் தேசிய புலனாய்வு முகமை (NIA), தீவிரவாத தடுப்பு படையினர் மற்றும் ரயில்வே காவல்துறையினர் ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனர். குற்றங்கள் கன்டுபிடிக்கப்பட்டால் குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்படுவர் என தெரிவித்தார். 

    இதையும் படிங்கயூடியூப் பார்த்து துப்பாக்கி தயாரிக்க இளைஞர்கள் போட்ட பிளான்! என்ஐஏ அதிரடி நடவடிக்கை

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....