Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கக் கூடிய உலகின் முதல் பறக்கும் படகு அறிமுகம்!

    ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கக் கூடிய உலகின் முதல் பறக்கும் படகு அறிமுகம்!

    ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கக் கூடிய உலகின் முதல் பறக்கும் படகு அடுத்தாண்டு அறிமுகப்படுத்தப்படும் என சுவிட்சர்லாந்து நாட்டின் ‘தி ஜீரோ எமிஷன்’ நிறுவனம் அறிவித்துள்ளது. 

    இந்தப் படகானது அலையின் மேற்பரப்பில் இருந்து 3 அடி உயரத்தில் பறக்கும் என்றும் மணிக்கு 76 கி.மீ மீட்டர் வேகத்தில் செல்லும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    அடுத்தாண்டு துபாயில் ஐ.நா.வின் 23-வது பருவநிலை மாற்றம் மாநாடு நடக்க உள்ளது. இந்த நோக்கத்துடன் பொருந்திச் செல்லும் விதமாக அந்தச் சமயத்தில்  இப்படகு துபாயில் அறிமுகப்படுத்தப்படும் என சுவிட்சர்லாந்து நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ள துபாயின் ஜினித் மரைன் நிறுவனம் அறிவித்துள்ளது.

    இந்தப் படகானது மற்றப் படகுகளை போன்று இல்லாமல், ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்குவதால், சுற்றுச் சூழலை மாசுபடுத்தும் கார்பன் டை ஆக்ஸைடு வாயு இதில் வெளியேறுவதில்லை. இதன் காரணமாக சுற்றுச் சூழலுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படாது. 

    மேலும், இந்தப் பறக்கும் படகில் இருந்து சத்தம் (ஒலி), அதிர்வு போன்றவை ஏற்படாது. இது மகிழ்ச்சியான பயணத்துக்கு ஏற்றதாக இருக்கும் என கூறப்படுகிறது. 

    இந்தப் படகிலுள்ள இறக்கை அமைப்புகள் கீழ் நோக்கி அமைத்துள்ளன. இதனால் தண்ணீரில் செல்லும் போது இந்தப்படகு தண்ணீரை கிழித்து கொண்டு செல்லும். அதேபோல் ஹைட்ரஜன் ஆக்சிஜனோடு எரிந்து இதற்கு தேவையான ஹைட்ரஜன் எரிபொருளும் கிடைக்கிறது. 

    இதையும் படிங்க: திருமண பந்தம் குறித்து அறிவித்த ஹரிஷ் கல்யாண்.. விரைவில் டும் டும் டும்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....