Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்நிலச்சரிவில் சிக்கித்தவிக்கும் நேபாளி; இதுவரை 13 பேர் உயிரிழப்பு..

    நிலச்சரிவில் சிக்கித்தவிக்கும் நேபாளி; இதுவரை 13 பேர் உயிரிழப்பு..

    நேபாளத்தின் அச்சம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவில் 13 பேர் உயிரிழந்தனர். 10 பேர் மாயமாகியுள்ளனர்.

    நேபாளத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால், நேபாளம் பல்வேறு இன்னல்களை அனுபவித்து வருகிறது. 

    இந்நிலையில், மேற்கு நேபாளத்தில் உள்ள அச்சம் மாவட்டத்தில் நிலச்சரிவில் சிக்கிய 10 பேர் மீட்கப்பட்டனர் என்று துணை தலைமை மாவட்ட அதிகாரி திபேஷ் ரிஜால் கூறினார். மேலும், இந்த நிலச்சரிவில் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 10 பேர் மாயமாகியுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. 

    இந்த பேரிடரை அடுத்து, உள்துறை அமைச்சர் பால் கிருஷ்ண காந்த் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளுக்காக ஹெரிகாப்டர்களை அனுப்ப உத்தரவிட்டுள்ளார்.

    நேபாளத்தில் ஏற்பட்டுள்ள தொடர் மழையால் லஸ்கு மற்றும் மகாகாளி ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, வீடுகள் மற்றும் இரண்டு பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டன. 

    இம்மாதிரியான நிகழ்வுகளால் நேபாளத்து மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

    பரோட்டா சாப்பிட கூடாது என்று ஏன் சொல்கிறார்கள் தெரியுமா? விவரம் உள்ளே!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....