Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அறிவிப்பை ‘விளம்பரம்' என விமர்சித்த முன்னாள் அமைச்சர்...

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அறிவிப்பை ‘விளம்பரம்’ என விமர்சித்த முன்னாள் அமைச்சர்…

    ‘கண்ணின் பார்வையை அழித்து விட்டு ராஜபார்வை’ என சொல்லவது போல டைடல் பார்க் அறிவிப்பு உள்ளது என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். 

    மதுரையில்  குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் ‘தோள் கொடுப்போம் தொழில்களுக்கு’ என்ற தலைப்பில் தென்மண்டல மாநாடு நேற்று நடைபெற்றது. 

    இந்த மாநாட்டில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் 5 ஏக்கரில் டைடல் பூங்கா அமைக்கப்படும் என்றார். மு.க.ஸ்டாலினின் இந்த அறிவிப்பை ‘விளம்பரம்’ என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். 

    மேலும், இது குறித்து முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியதாவது:

    தமிழகத்தில் 2.25 இலட்சம் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் உள்ளன, சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு மின் கட்டண உயர்வு பேரடியாக உள்ளது. மதுரைக்கு டைடல் பார்க் கொண்டு வரப்படும் என முதலமைச்சர் அறிவித்தது விளம்பர அறிவிப்பு.

    இதையும் படிங்க: “10,000 பேருக்கு வேலைவாய்ப்பு” ரூ.600 கோடி செலவில் நம்ம மதுரையிலும் ”டைடல் பூங்கா”!

    அதுமட்டுமல்லாமல், கள ஆய்வு நடத்தாமல் டைடல் பார்க் கொண்டு வரப்படும் என முதலமைச்சர் அறிவித்து உள்ளார், மதுரையில் ஏற்கனவே எல்காட் மூலம் உள்ள 2 தகவல் தொழில்நுட்ப பூங்கா முழுமையாக செயல்படுத்தவில்லை.

    மேலும், போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள மதுரை மாட்டுத்தாவணி அருகே டைடல் பார்க் அமைவது சரியானது அல்ல, அடிப்படை கட்டமைப்பு இல்லாத இடத்தில் டைடல் பார்க் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது முதலீட்டாளர்களிடம் கருத்து கேட்காமல் டைடல் பார்க் அறிவிக்கப்பட்டு உள்ளது. 

    ‘கண்ணின் பார்வையை அழித்து விட்டு ராஜபார்வை’ என சொல்லவது போல டைடல் பார்க் அறிவிப்பு உள்ளது. திமுகவின் முப்பெரும் விழா ஸ்டாலினின் புகழ் பாடும் விழாவாக அமைந்தது. டைடல் பார்க் கட்டுவது சிறுவர் பூங்கா அமைப்பது போல அல்ல.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....