Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாராணி எலிசபெத்தின் இறுதி சடங்கில் பங்கேற்க லண்டன் புறப்பட்டார் குடியரசு தலைவர் திரௌபதி

    ராணி எலிசபெத்தின் இறுதி சடங்கில் பங்கேற்க லண்டன் புறப்பட்டார் குடியரசு தலைவர் திரௌபதி

    இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் இறுதி சடங்கில் பங்கேற்பதற்காக குடியரசு தலைவர் திரௌபதி முர்மு விமான மூலம் லண்டன் புறப்பட்டு சென்றார்.

    இங்கிலாந்து நாட்டின் ராணி இரண்டாம் எலிசபெத் கடந்த செப்டம்பர் 8 ஆம் தேதி காலமானார். இந்நிலையில் அவரது மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளின் தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    மேலும், ராணி எலிசபெத்தின் இறுதி சடங்கு வருகிற செப்டம்பர் 19 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதனிடையே ராணி எலிசபெத்தின் இறுதி சடங்கில் பங்கேற்பதற்காக உலகத் தலைவர்கள் இங்கிலாந்துக்கு செல்கின்றனர்.

    இதையும் படிங்க: ராணி எலிசபெத்துக்காக மெக்கா புனித யாத்திரை சென்ற நபர் கைது ! சவுதியில் நடந்தது என்ன ?

    இந்நிலையில், இந்திய அரசின் சார்பாக, இங்கிலாந்து ராணி எலிசபத்தின் இறுதி சடங்கில் பங்கேற்பதற்காக, குடியரசு தலைவர் திரௌபதி முர்மு அவர்கள் விமான மூலம் லண்டன் புறப்பட்டு சென்றார்.

    கடந்த ஞாயிற்றுக்கிழமை ராணி இரண்டாம் எலிசபெத்தின் மறைவுக்கு இந்தியாவின் சார்பில் துக்கம் அனுசரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....