Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்ராணி எலிசபெத்துக்காக மெக்கா புனித யாத்திரை சென்ற நபர் கைது ! சவுதியில் நடந்தது என்ன...

    ராணி எலிசபெத்துக்காக மெக்கா புனித யாத்திரை சென்ற நபர் கைது ! சவுதியில் நடந்தது என்ன ?

    ராணி எலிசபெத்துக்கா ஒருவர் மெக்காவுக்குப் புனித யாத்திரை மேற்கொண்ட நபரை சவுதி அரேபியா அரசு கைது செய்துள்ளது. 

    பிரிட்டனின் அரசி என்றாலே பலருக்கும் முதலில் நியாபகம் வருவது இரண்டாம் எலிசபெத் அவர்கள்தான். தனது தந்தை ஆறாம் ஜார்ஜ் மறைவைத் தொடர்ந்து, 1952-இல் அரியணையேறிய இரண்டாம் எலிசபெத், சாதனை அளவாக 70 ஆண்டுகள் அரசியாக இருந்தார். இந்நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் அவர் கொரோனா பாதிப்புக்குள்ளாகி மீண்டு வந்தார்.

    அதன்பின்னர், கோடைக் கால ஓய்வுக்காக பக்கிங்ஹாம் அரண்மனையிலிருந்து சென்று, ஸ்காட்லாந்திலுள்ள பால்மரால் அரண்மனையில் அவர் தங்கியிருந்தார். அரசியின் மகளான இளவரசி ஆன், அவருடன் இருந்தார். இந்நிலையில், 96 வயதான இரண்டாம் எலிசபெத்திற்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக தகவல்கள் வெளிவந்தது. 

    மேலும், ஸ்காட்லாந்தின் பால்மரால் அரண்மனையில் தங்கியிருந்த அரசி எலிசபெத்தின் உடல்நலம் குறித்து மருத்துவர்கள் கவலை தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், எலிசபெத் காலமாகிவிட்டதாக பக்கிங்ஹாம் அரண்மனை அதிகாரபூர்வமாக அறிவித்தது. 

    ராணி எலிசபெத்துக்காக உலக நாடுகள் பலவும் துக்கம் அனுசரித்தன. இந்த நிலையில், ராணி எலிசபெத்துக்கா ஒருவர் மெக்காவுக்குப் புனித யாத்திரை மேற்கொண்ட போது அவரை சவுதி அரேபியா அரசு கைது செய்துள்ளது. 

    அந்த நபர் ஏமன் நாட்டைச் சேர்ந்தவர். இவர் புனித யாத்திரையின்போது மெக்காவில் ராணி எலிசபெத்துக்காகப் பதாகை ஏந்தியதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக சமூக வலைதளங்களில் வெளியான அந்த வீடியோவில், “ராணி எலிசபெத்துக்காக இந்த உம்ரா புனித யாத்திரை. சொர்க்கத்திலும், நீதிமான்கள் மத்தியிலும் அவரை ஏற்றுக்கொள்ளும்படி கடவுளிடம் கேட்டுக்கொள்கிறோம்” என்று அந்த நபர் கூறியதாகச் சொல்லப்படுகிறது. உம்ரா என்பது எந்த நேரத்திலும் மேற்கொள்ளக்கூடிய ஒரு புனித யாத்திரை. 

    ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் புனித யாத்திரையான ஹஜ் யாத்திரையிலிருந்து உம்ரா என்பது வேறுபட்டதாகும். இருப்பினும், அந்த நபர் புனித யாத்திரைக்கான விதிமுறைகள் மற்றும் அறிவுறுத்தல்களை மீறியதாக கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்தது. 

    63 ஆண்டுகளுக்கு திறக்க முடியாது.. ஆஸ்திரேலியாவிற்கு பறந்த ராணி எலிசபெத்தின் ரகசிய கடிதம்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....