Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்அரசு மருத்துவமனைகளில் மருந்து தட்டுப்பாடு-அமைச்சர் மா.சுப்பிரமணியம் பதில்

    அரசு மருத்துவமனைகளில் மருந்து தட்டுப்பாடு-அமைச்சர் மா.சுப்பிரமணியம் பதில்

    தமிழகத்தில் எங்கேயும் மருந்து தட்டுப்பாடு இல்லை என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். 

    முன்னதாக, நேற்று (செப்டம்பர் 13) அரசு மருத்துவமனைகளில் மருந்து, மாத்திரைகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், மக்கள் சிரமப்படுகின்றனர் என மக்கள் நீதி மையம் தெரிவித்திருந்தது. 

    மேலும், இதுகுறித்து நேற்று மக்கள் நீதி மையம் தனது ட்விட்டர் பதிவில், ‘வழக்கமாக மருந்து கொள்முதல் செய்து மருத்துவமனைகளுக்கு அனுப்பும் தமிழ்நாடு மருத்துவக் கழகம், சில மாதங்களாக போதிய மருந்துகளை விநியோகம் செய்வதில்லை என்று செய்திகள் வெளியாகி உள்ளன.

    இதையும் படிங்க:ரெய்டில் சிக்கிய கட்டுக்கட்டான பணம், கிலோக் கணக்கான நகைகள் – லஞ்ச ஒழிப்புத்துறை தகவல்

    உயிர்காக்கும் மருந்துகள், நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரை, வைட்டமின் மாத்திரைகள் கிடைக்காமல் மக்கள் தவிக்கின்றனர். அதனால், உடனடியாக போதிய அளவு மருந்து கொள்முதல் செய்து, மருத்துவமனைகளுக்கு விநியோகிக்குமாறு தமிழக அரசை மக்கள் நீதி மையம் வலியுறுத்துவதாக’ தெரிவித்திருந்தது. 

    இந்நிலையில், தமிழகத்தில் எங்கேயும் தட்டுப்பாடு இல்லை என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். 

    மேலும் அவர், ‘மக்களை தேடி மருத்துவம்’ திட்டத்தின் மூலம் மருந்துகள் வழங்கப்படுகிறது. ஒரு சில இடங்களில் தட்டுப்பாடு ஏற்பட்டாலும் தவறுகள் ஏதும் கண்டறியப்பட்டாலும் அதிகாரிகள் மீது தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

    ஹிந்தி மொழி தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி புகழாரம்..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....