Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியா200 அடி ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த சிறுமி; 7 மணி நேர போராட்டத்திற்கு பின்...

    200 அடி ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த சிறுமி; 7 மணி நேர போராட்டத்திற்கு பின் உயிருடன் மீட்பு

    ராஜஸ்தான் மாநிலத்தில் ஆழ்துளை கிணற்றில் தவிர விழுந்த சிறுமி 7 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மீட்கப்பட்டார்.

    ராஜஸ்தான் மாநிலம், தௌசா மாவட்டத்தில் உள்ள ஜஸ்ஸா பாடா என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் சிறுமி அங்கிதா . இவர் தனது வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தபோது, திடீரென எதிர்ப்பாராத விதமாக 200 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் விழுந்தார். 

    இதுகுறித்து தகவல் அறிந்து சென்ற காவல்துறையினரும் மீட்பு குழுவினரும் அந்தச் சிறுமியை மீட்பதற்கான முயற்சியில் ஈடுபட்டனர். அந்தச் சிறுமி சுமார்  60 முதல் 70 அடி ஆழத்தில் சிக்கியுள்ளார் என்பதை மீட்புக் குழுவினர் கண்டறிந்தனர். 

    பின்பு, மண் அள்ளும் இயந்திரங்கள் மற்றும் டிராக்டர்கள் வரவழைக்கப்பட்டு மீட்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. சிறுமியின் நிலை கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டது. தொடர்ந்து அந்தச் சிறுமிக்கு குழாய்கள் மூலமாக ஆக்சிஜன் வழங்கப்பட்டது. 

    சுமார் 7 மணி நேர போராட்டத்திற்கு பிறகு, சிறுமி பத்திரமாக மீட்கப்பட்டார். இதன்பின்னர், அந்தச் சிறுமி உடனடியாக பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக தௌசா மாவட்டர் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: பட்டியலின மாணவர்களுக்கு தின்பண்டம் தர மறுத்த கடையின் உரிமையாளர் கைது!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....