Saturday, March 16, 2024
மேலும்
    Homeகல்வி மற்றும் வேலை வாய்ப்புஉச்ச நீதிமன்றத்தில்‌ காலியாக உள்ள பணியிடங்கள்: ஊதியமாக ரூ.80,803 நிர்ணயம்..

    உச்ச நீதிமன்றத்தில்‌ காலியாக உள்ள பணியிடங்கள்: ஊதியமாக ரூ.80,803 நிர்ணயம்..

    உச்ச நீதிமன்றத்தில்‌ காலியாக உள்ள பணியிடங்கள் குறித்த அறிவிப்பு தற்போது வெளிவந்துள்ளது. 

    நாட்டின் முதன்மை நீதிமன்றம் என்றால் அது உச்ச நீதிமன்றம். இந்த நீதிமன்றத்தில் தற்போது காலியாகவுள்ள 11 டெக்னிக்கல் அசிஸ்டென்ட் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வு அடிப்படையிலான அறவிப்புகள் வெளிவந்துள்ளது. 

    அதன்படி, காலியாக உள்ள 11 பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக மாதம்‌ ரூ.44,900 – 80,803 வழங்கப்படும்‌ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த பணியிடத்துக்கு  18 முதல்‌ 30 வயதிற்குள்‌ இருக்க வேண்டும்‌. அதே சமயம் அரசு விதிகளின்‌ இடஒதுக்கீடு பிரிவினருக்கு வயது வரம்பில்‌ சலுகைகள்‌ வழங்கப்பட்டுள்ளது. 

    இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்க, பொறியியல்‌ துறையில்‌ கணினி அறிவியல்‌, ஐடி பிரிவில்‌ பிஇ அல்லது பி.டெக்‌ முடித்து ஒரு ஆண்டு பணி அனுபவம்‌ பெற்றிருக்க வேண்டும்‌ அல்லது எண்சிஏ, எம்‌.எஸ்சி கணினி அறிவியல்‌, பி.எஸ்சி (கணினி அறிவியல்‌), பிசிஏ போன்ற ஏதாவதொரு கல்வித்தகுதியுடன்‌ ஒரு ஆண்டு கணினித்‌ துறை சார்ந்த பணிகளில்‌ அனுபவம்‌ பெற்றிருக்க வேண்டும்‌.

    மேலும், கல்வித்‌ தகுதி, பணி அனுபவம்‌ ஆகியவற்றின்‌ அடிப்படையில்‌ எழுத்துத்‌ தேர்வு, செய்முறைத்‌ தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் அழைக்கப்படுவர்‌. இதில்‌ வெற்றி பெற்றவர்கள்‌ நேர்முகத்‌ தேர்வுக்கு அழைக்கப்படுவர்‌. பின்னர்‌ விண்ணப்பத்தாரரின்‌ தகுதி அடிப்படையில்‌ பணிக்கு நியமனம்‌ செய்யப்படுவர்‌. 

    https://main.sci.gov.in/ இணையதளத்தில்‌ கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம்‌ செய்து, பூர்த்தி செய்து அதனுடன்‌ தேவையான சான்றிதழ்களின்‌ நகல்களை இணைத்து இணையத்தில் குறிப்பிட்டுள்ள அஞ்சல்‌ முகவரிக்கு அனுப்ப வேண்டும்‌. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள்‌ சென்று சேர வேண்டிய கடைசி நாளாக 31-12-2022 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

    விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல்‌ முகவரி:

    The Registrar(Recruitment), 

    Supreme Court Of India, T

    ilak Marg,

    New Delhi, Pin-110001.

    மேலும், விவரங்களுக்கு https://main.sci.gov.in/ என்ற இணையத்தை அனுகவும். 

    அதிமுக சார்பில் மக்களை திரட்டி மத்திய அரசுக்கு எதிராக மிகப்பொரிய போராட்டம் நடத்த முடிவு!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....