Saturday, March 16, 2024
மேலும்
    Homeகல்வி மற்றும் வேலை வாய்ப்புபிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு இவ்வளவு வேலையா? சாலை பாதுகாப்பு கழகம் அறிவிப்பு

    பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு இவ்வளவு வேலையா? சாலை பாதுகாப்பு கழகம் அறிவிப்பு

    மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் எல்லை சாலை பாதுகாப்பு கழகத்தில் நிரப்பப்பட உள்ள 250 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

    இந்த பணிக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, ஆப்ரேட்டர் (கம்யூனிகேசன்) – 35 நபர்களும், எலக்ட்ரீசியன் – 30 நபர்களும், வெல்டர் – 24 நபர்களும், மல்டி ஸ்கில்டு வொர்க்கர் (பிளாக் ஸ்மித்) – 22 நபர்களும், மல்டி ஸ்கில்டு வொர்க்கர் (குக்) – 86 நபர்களும், டிராப்ட்ஸ்மேன் – 14 நபர்களும், ஹிந்தி டைப்பிஸ்ட் – 10 நபர்களும், சூப்பர்வைசர் – 29 நபர்களும் எல்லை சாலை பாதுகாப்பு கழகத்தில் நிரப்பப்பட உள்ளனர். 

    இந்தப் பணியிடங்களுக்கு, சூப்பர்வைசர் பணிக்கு மட்டும் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். இதர பணியிடங்களுக்கு பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

    மேலும், இப்பணியிடங்களுக்கு வயது வரம்பு 26.9.2022 தேதியின்படி மல்டி ஸ்கில்டு வொர்க்கர் பணிக்கு 18 முதல் 25க்குள்ளும், இதர பணிகளுக்கு 18 முதல் 27க்குள் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு விதிகளின்படி இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது வரம்பில் சலுகை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் எழுத்துத்தேர்வு மற்றும் செய்முறைத்தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். இப்பணியிடங்களுக்கு http://bro.gov.in/ என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி இம்மாதம் 26-ம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....