சென்னை: சென்னையில் இன்று ஒரு கிராம் தூய தங்கத்தின் விலை 15 ரூபாய் அதிகரித்து ரூ.5,166-க்கு விற்பனையாகிறது.
தங்கம் விலை நிலவரம்:
சென்னையில் நேற்று ஒரு கிராம் 22 கேரட் தங்கத்தின் விலை 4,722 ரூபாய்க்கு விற்பனையான நிலையில், இன்று ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 14 ரூபாய் அதிகரித்து ரூ.4,736-க்கு விற்கப்படுகிறது. இதன்படி, ஒரு சவரனுக்கு 112 ரூபாய் அதிகரித்து ரூ.37,888-க்கு விற்பனையாகிறது
அதேபோல், சென்னையில் நேற்று ஒரு கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 5,151 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று ஒரு கிராம் தூய தங்கத்தின் விலை 15 ரூபாய் அதிகரித்து ரூ.5,166-க்கு விற்பனையாகிறது. இதன்படி, ஒரு சவரனுக்கு 120 ரூபாய் அதிகரித்து ரூ.41,328-க்கு விற்பனையாகிறது
வெள்ளி விலை நிலவரம்:
சென்னையில், நேற்று ஒரு கிராம் வெள்ளி 58 ரூபாய் 20 காசுகளுக்கு விற்பனையான நிலையில், இன்று ஒரு கிராம் வெள்ளி 30 காசுகள் அதிகரித்து, 58 ரூபாய் 50 காசுகளுக்கு விற்பனையாகிறது.
டாலர் மதிப்பு: ஒரு டாலரின் இந்திய ரூபாய் மதிப்பு 79.8075 ஆக உள்ளது.