Friday, March 15, 2024
மேலும்
    Homeசெய்திகள்வர்த்தகம்ஒரே நாளில் அதிரடியாக உயர்ந்த ஆபரணத் தங்கத்தின் விலை: சோகத்தில் நகை பிரியர்கள்

    ஒரே நாளில் அதிரடியாக உயர்ந்த ஆபரணத் தங்கத்தின் விலை: சோகத்தில் நகை பிரியர்கள்

    சென்னை : அரசனாக இருந்தாலும் ,ஆண்டியாக இருந்தாலும் யாருக்கும் தங்கத்தின் மீதான மோகம் மட்டும் குறையவே குறையாது .அதிலும் குறிப்பாக தங்கத்தின் மீது பெண்களுக்கு இருக்கும் ஆசை அளவிட முடியாதது .காரணம் அந்த அளவிற்கு தங்கமானது நம் வாழ்க்கையின் ஒரு அங்கமாகவே மாறிவிட்டது.அதிக அளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது.அப்படிப்பட்ட தங்கம் நமக்கு மட்டுமல்ல நாட்டின் பொருத்தரத்தையே நிர்ணயிக்கும் ஒரு அங்கமாகவும் இருக்கிறது.

    இந்த நிலையில் தற்போது பண்டிகை கலாம் என்பதால் அவளவு தீபாவளி என்பதால் பலரும் தங்கம் வாங்க திட்டமிட்டுவது வழக்கம் .அந்த வகையில் ,கடந்த சில நாட்களாக அதிகரித்து வந்த தங்கத்தின் விலை ,தொடர்ந்து குறைந்து வந்தது. இதனால் நகை பிரியர்கள் பெரும் மகிழ்ச்சியில் இருந்தனர் .

    ஆனால் நேற்று வரை சவரனுக்கு 160 வரை குறைந்திருந்த தங்கம் ,இன்று சவரனுக்கு 600 ரூபாயாக உயர்ந்துள்ளது .சென்னையில் நேற்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் குறைந்து 37,320 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

    இதையும் படிங்க: இந்திய கடற்படையினர் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு; மீனவரை சுட்ட விவகாரத்தில் அதிரடி நடவடிக்கை

    சென்னையில் இன்று (22.20.2022) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 600 ரூபாய் அதிகரித்து 37,920 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    அதே ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 75 ரூபாய் உயர்ந்து 4,740 ரூபாய்க்கு விற்க்கப்படுகிறது.நாளை மறுநாள் தீபாவளி பண்டிகையை கொண்டாடப்படுவதையொட்டி நகை வாங்குவது அதிகரித்துள்ள நிலையில் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்திருப்பது நகை பிரியர்கள் மத்தியில் சற்று சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    மேலும் இந்த தங்கத்தின் விலை அதிகரிக்கவும் வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

    இன்றைய நிலவரப்படி, 24 காரட் தங்கத்தின் விலை, கிராம் ஒன்றிற்கு 75 ரூபாய் அதிகரித்து 5,142 ரூபாய்க்கும், சவரனுக்கு 600 ரூபாய்அதிகரித்து 41,136 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    அதேபோல் சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 1.70 காசுகள் உயர்ந்து 63.20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுகிறது.

    இதையும் படிங்க: ஓடிப்போய் திருமணம் செய்பவர்கள் கவனத்திற்கு ? பதிவுத் திருமணங்களில் புது ட்விஸ்ட் வைத்த கோர்ட்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....