Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்இத்தாலி பிரதமரின் ராஜிநாமா கடிதம் நிராகரிப்பு

    இத்தாலி பிரதமரின் ராஜிநாமா கடிதம் நிராகரிப்பு

    இத்தாலி பிரதமர் மரியோ டிராகியின் ராஜிநாமா கடிதத்தை அந்நாட்டு அதிபர் நிராகரித்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. 

    இத்தாலியில் கூட்டணி கட்சிகளின் ஆதரவுகளுடன் மரியோ டிராகி பிரதமராக கடந்த 2021-ம் ஆண்டு நியமிக்கப்பட்டார். இத்தாலியின் அதிபராக தற்போது செர்ஜியோ மெட்டரெல்லா உள்ளார். 

    இந்நிலையில், இத்தாலியில் பொருளாதாரம் சரிவை சந்தித்துள்ளது. இந்த பொருளாதார சரிவால், கூட்டணி கட்சிகளால் இத்தாலி அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டது. 

    இதையடுத்து, இத்தாலி நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்நிலையில், இத்தாலி பிரதமர் மரியோ டிராகியின் ராஜினாமா கடிதத்தை அதிபர் செர்ஜியோ மெட்டரெல்லாவுக்கு அனுப்பிவைத்துள்ளார். 

    ஆனால், இத்தாலி பிரதமர் மரியோ டிராகியின் ராஜினாமா கடிதத்தை அதிபர் செர்ஜியோ மெட்டரெல்லா நிராகரித்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. 

    இந்நிலையில், நாட்டில் நிலவும் தற்போதைய அரசியல் நிலவரத்தைப் பற்றி நாடாளுமன்றத்தில் உரையாற்றும் படி பிரதமரை அவர் கேட்டுக்கொண்டுள்ளதாக அதிபர் மாளிகை தகவல் தெரிவித்துள்ளது.

    இங்கிலாந்தில் சூடுபிடிக்கும் பிரதமர் தேர்தல்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....