Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்இங்கிலாந்தில் சூடுபிடிக்கும் பிரதமர் தேர்தல்

    இங்கிலாந்தில் சூடுபிடிக்கும் பிரதமர் தேர்தல்

    இங்கிலாந்தில் ஆளும் கட்சியின் எதிர்ப்பு காரணமாக பிரதமர் போரிஸ் ஜான்சன் சில தினங்களுக்கு முன் பதவி விலகினார். இதன்பின்னர், பிரதமர் பதவிக்கான போட்டி சூடுபிடித்துள்ளது. 

    இங்கிலாந்தில் தற்போது பிரதமர் பதவி வெற்றிடமாக உள்ளது. பிரதமர் தேர்தலை பொறுத்தவரையில், கன்சர்வேடிவ் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுபவரே பிரதமராக முடியும். ஆகவே, கன்சர்வேடிவ் கட்சியின் தலைவரை தேர்ந்தெடுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. 

    இந்த தேர்தலில், இங்கிலாந்து நிதி அமைச்சர் பதவியில் இருந்து அண்மையில் விலகிய ரிஷி சுனக், முன்னாள் அமைச்சர்களான பாகிஸ்தான் வம்வசாளியைச் சேர்ந்த சஜித் ஜாவித், ஜெர்மி ஹன்ட், கிரான்ட் ஷாப்ஸ், அட்டர்னி ஜெனரல் சுயெல்லா பிராவர்மன், ஈராக் வம்சாவளியான, நதிம் ஸாஹவி, நைஜீரிய வம்சாவளியான கெமி பெடநாச், டாம் டுகன்டட் ஆகியோர் களத்தில் உள்ளனர். 

    இங்கிலாந்தின் புதிய பிரதமர் யார் என்பது செப்டம்பர் 5-ந் தேதி அறிவிக்கப்படும் என்று கன்சர்வேட்டிவ் கட்சியின் சக்தி வாய்ந்த ‘1922 குழு’ தெரிவித்துள்ளது. புதிய பிரதமர் தேர்வு முறைக்கான கால அட்டவணை மற்றும் விதிகள் ஜூலை 12-ம் தேதி அன்று வகுக்கப்பட்டது.

    இந்த விதிகளின்படி, முதல் சுற்றில் ஒவ்வொரு போட்டியாளர்களுக்கும் குறைந்தது 30 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவளிக்க வேண்டும். முதல் சுற்றில் குறைவான உறுப்பினர்கள் ஆதரவளித்தால் போட்டியாளர்கள் தேர்தலை விட்டு வெளியேற வேண்டும். 

    இதன்பிறகு, களத்தில் மீதமிருக்கும் போட்டியாளர்களுக்கு மீண்டும் இதே முறைப் பின்பற்றப்படும். தேர்தல் களத்தில் இறுதியாக இரண்டு வேட்பாளர்கள் போட்டிக்கு வந்த பிறகு, கன்சர்வேட்டிவ் கட்சியை சேர்ந்த 2 லட்சத்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் மத்தியில் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு ஆதரவை திரட்டுவார்கள்.

    இதன் பின்னர் வாக்கெடுப்பு முறை நடத்தப்பட்டு அதிக வாக்குகள் பெறுவோர் கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவராகவும், இங்கிலாந்தின் பிரதமராகவும் அறிவிக்கப்படுவர்.

    கன்சர்வேட்டிவ் கட்சியின் பெரும்பாலான எம்.பிக்கள் இதுவரை தாங்கள் யாருக்கு ஆதரவு அளிக்கப் போகிறோம் என்பதை வெளிப்படையாக அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    ஆக்ரோஷத்துடன் காணப்படும் இந்திய தேசிய சின்னம்: எதிர்க்கட்சிகள் விமர்சனம் 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....