Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாஆக்ரோஷத்துடன் காணப்படும் இந்திய தேசிய சின்னம்: எதிர்க்கட்சிகள் விமர்சனம்

    ஆக்ரோஷத்துடன் காணப்படும் இந்திய தேசிய சின்னம்: எதிர்க்கட்சிகள் விமர்சனம்

    பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்த தேசிய சின்னத்தின் புதிய சிலை பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறது.

    புதிதாகக் கட்டப்பட்டு வரும் நாடாளுமன்றத்தில் இந்தியாவின் தேசிய சின்னமான நான்குமுக சிங்கத்தின் சிலையை திங்கள் கிழமை (ஜூலை 12) பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

    இந்த சிலை குறித்து எதிர்க்கட்சி தலைவர்கள் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். எனினும், நன்கு ஆராய்ச்சி செய்யப்பட்டு சரியான முறையில் தேசிய சின்னம் உருவாக்கப்பட்டதாக மோடி தரப்பு கூறி வருகிறது.

    நான்குமுக சிங்கத்தின் முகத்தில் உள்ள உணர்ச்சிகள் குறித்து நாட்டின் பல தலைவர்கள் கருத்து கூறி வருகின்றனர். தேசிய சின்னத்தின் வடிவமைப்பை மாற்றியதால் மோடியின் அரசு இந்திய அரசியலமைப்பை மீறியுள்ளதாக எதிர்க்கட்சிகள் கருத்துகளை கூறி வருகின்றனர்.

    எதிர்க்கட்சிகள் மூன்று கருத்துகளைக் கூறி புதிதாக திறக்கப்பட்ட தேசிய சின்னத்துக்கு திங்கள் கிழமை எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இந்த சிலையை திறந்ததன் மூலம் மோடி, இந்திய அரசியலமைப்பை மீறிவிட்டார் எனவும், சிலை திறப்புக்கு இந்து வழக்கப்படி பிரார்த்தனைகள் நடத்தியதால் இந்திய ஒருமைப்பாட்டை காயப்படுத்தி விட்டார் எனவும், இந்த சிலை திறப்புக்கு எதிர் கட்சிகள் யாரையும் அழைக்கவில்லை எனவும் கூறி விமர்சித்தனர்.

    இந்நிலையில், புதிதாக திறக்கப்பட்ட தேசிய சின்னத்தையும், உத்தரபிரதேசம் சாரநாத்தில் உள்ள உண்மையான தேசிய சின்னத்தையும் ஒப்பிட்டு விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன.

    அசோகத்தூணில் உள்ள சிங்கங்களின் முகம் அமைதியாகவும், நிதானமான தோற்றத்துடனும் காணப்படுவதாகவும், தற்போது புதிதாக திறக்கப்பட்டுள்ள சிங்கம் மிகவும் ஆக்ரோஷத்துடனும் உள்ளதாக எதிர்க்கட்சியினர் கூறியுயுள்ளனர்.

    இது குறித்து காங்கிரஸ் கட்சியின் தொலைத்தொடர்பு பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘அசோகத்தூணில் உள்ள சிங்கத்தின் பண்புகளுக்கு எதிரான வகையில் திறக்கப்பட்டுள்ள புதிய சிலை, இந்தியாவின் தேசிய சின்னத்துக்கு அவமானத்தை அளிக்கும் விதத்தில் அமைந்துள்ளது.’ என பதிவிட்டுள்ளார்.

    தமிழகத்தில் சர்வதேச ஒலிம்பியாட் செஸ் தொடருக்கான பணிகள் தீவிரம்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....