Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாதெலுங்கானாவில் தொடர் கனமழை- பள்ளிகள் திறக்கப்படும் தேதியில் மாற்றம்

    தெலுங்கானாவில் தொடர் கனமழை- பள்ளிகள் திறக்கப்படும் தேதியில் மாற்றம்

    தொடர் கனமழை காரணமாக தெலுங்கானா மாநிலத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் வருகிற ஜூலை 16-ம் தேதி வரை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது. 

    தெலுங்கானா மாநிலத்தில் கனமழை பெய்யும் என்ற வானிலை முன் அறிவிப்பு காரணமாக, அம்மாநில அரசு அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் மூன்று நாள்கள்  விடுமுறை அளித்துள்ளது.

    பள்ளிகள்  ஜூலை 14-ம் தேதி திறக்க திட்டமிடப்பட்டிருந்த நிலையில், மாநிலத்தின் பல பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், மேலும் மூன்று நாள்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து தெலுங்கானா மாநில பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: 

    தொடர் கனமழை மற்றும் மோசமான வானிலை காரணமாக அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும்  ஜூலை 14 முதல் ஜூலை 16-ம் தேதி வரை விடுமுறையை நீட்டிக்க அரசு முடிவு செய்துள்ளது. 

    ஜூலை 18-ம் தேதி முதல் கல்வி நிறுவனங்கள் மீண்டும் திறக்கப்படும். 

    இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    கடந்த சில நாள்களாகவே தெலுங்கானா மாநிலத்தில் கனமழை பெய்து வருவதால், பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வருகிற 17-ம் தேதி வரை அதிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 

    மராட்டியத்தில் கனமழை; பலி எண்ணிக்கை 89 ஆக உயர்வு

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....