Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாமராட்டியத்தில் கனமழை; பலி எண்ணிக்கை 89 ஆக உயர்வு

    மராட்டியத்தில் கனமழை; பலி எண்ணிக்கை 89 ஆக உயர்வு

    மராட்டியத்தில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 89 ஆக உயர்ந்துள்ளது. 

    மராட்டிய மாநிலத்தில் கடந்த சில நாள்களாகவே கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. தொடர் கனமழை காரணமாக மராட்டிய மாநிலத்தில் உள்ள பல ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளை வெள்ளநீர் முழுவதுமாக சூழ்ந்துள்ளது. மேலும், பல முக்கிய சாலைகளும் போக்குவரத்து இன்றி துண்டிக்கப்பட்டுள்ளது.

    மும்பை, புனே, சதரா, சோலாப்பூர், சங்லி, கோல்ஹபூர், ரத்னகிரி, சிந்துதுர்க், நாசிக் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் உள்பட இயற்கை பேரிடர்களில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 89 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இதில், பல பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. 

    கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மராட்டிய மாநிலத்தில் கனமழை மேலும் சில நாள்களுக்கு நீடிக்கலாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. \

    மராட்டிய மாநில கோதாவரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....